வர்த்தகம்

மின்சார ஸ்கூட்டர், ஆட்டோ, பஸ்களுக்கு பேட்டரிகள் தயாரிக்கும் கிரின்டெக் : அம்பத்தூரில் புதிய தொழிற்சாலை நிறுவியது

சென்னை, பிப்.3

பேட்டரி தயாரிப்பு நிறுவனமான கிரீன்டெக் பேட்டரியில் ஓடும் மின்சார ஸ்கூட்டர், ஆட்டோ, பஸ்களுக்கு தேவையான லித்தியம், அயன் பேட்டரிகளை தயாரிக்க தொழிற்சாலையை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நிறுவி யுள்ளது.

இது தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து ரூ.100 கோடி முதலீட்டில் தொழிற்சாலை துவங்கும் திட்டம் இது என்று இணை நிறுவனர்கள் புனீத் ஜெயின் நிக்கிலேஷ் மிஸ்ரா ஆகியோர் தெரிவித்தனர்.

எரிசக்தி சேமிப்பு சார்ஜ் பேட்டரிகளுக்கு லித்தியம் – அயன் பேட்டரியில் நிபுணத்துவம் பெற்று வரும் கிரின்டெக் தனது உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 2 சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், விவசாய டிராக்டர்கள் மற்றும் இலகுரக வாகனங்களுக்கு உகந்த லித்தியம் அயன் பேட்டரிகளை ஓராண்டிற்கு 400 mwh உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டிருக்கும். 2020 அக்டோபரில் ரூ 100 கோடி முதலீடு கொண்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு உடன் கிரின்டெக் செய்து கொண்டுள்ளது.

கிரின்டெக்- இணை நிறுவனரான புனீத் ஜெயின் கூறுகையில், “எங்களுடைய அதிநவீன ஆலை, அதிநவீன தயாரிப்பு வசதி கொண்டது. நாங்கள் அதிகபட்ச அளவிலான தானியங்கி நுட்பத்தை நாங்கள் நிறுவியிருக்கிறோம். சம காலத்திய தரக்கட்டுப்பாடு கோட்பாடுகளைப் பயன்படுத்தி உள்ளோம்” என்றார்.

பலவகை திறன் கொண்ட பேட்டரிகளுக்கு கூடுதலாக இந்தியாவில் மின் வாகனங்களின் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியை அடைவதற்கு கிரின்டெக்- நவீன ரக மின்கல மேலாண்மை அமைப்புகளையும் உற்பத்தி செய்யும். புதிய அமைவிடத்தில் அதிநவீன அம்சங்கள் அமைந்துள்ளன. இது தரம் மற்றும் பாதுகாப்பிற்கு உயர்தரங்களை பேணி வருகிறது.

இணை நிறுவனர் நிக்கிலேஷ் மிஸ்ரா கூறுகையில், “எங்களுக்கு அதிகரித்த எண்ணிக்கையில் விசாரணைகள் வந்த வண்ணம் உள்ளன மற்றும் எங்களுடைய இலக்கு பிரிவுகளில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் என பல்வேறு செயல்திட்டங்களில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இப்புதிய ஆலை வளாகத்தில், ஒரு அதிநவீன ஆராய்ச்சி பிரிவும் உள்ளடங்கும், இது பெருகிவரும் தேவைகளை மிகவும் வேகமாக பூர்த்திசெய்வதற்கு எங்களுக்கு பெரிதும் உதவும்” என்றார்.

இந்த தொடக்க விழா பூஜையில், அசோக் லேலண்டு முன்னாள் உதவி தலைவர் வி. சுமந்திரன் மற்றும் காக்னிசன்ட் நிறுவன இணை நிறுவனரும் முன்னாள் உதவி தலைவருமான லக்ஷ்மி நாராயணன், கிரின்டெக் இயக்குநர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். விரைவாக வளர்ந்துவரும் மின் வாகன தொழில்துறையில் கிரின்டெக் ஆற்றிவரும் முன்னோடி பங்கை குறிப்பிட்டு அவர்கள் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *