வர்த்தகம்

7 வயது சிறுமி ‘லைப் செல்’ தொப்புள் கொடி ரத்த வங்கி உதவியால் உயிர் பிழைத்தார்

அபூர்வ ரத்த சோகையினால் பாதித்த

7 வயது சிறுமி ‘லைப் செல்’ தொப்புள் கொடி ரத்த வங்கி உதவியால் உயிர் பிழைத்தார்

சென்னை, நவ.21

அபூர்வ வகை ரத்த சோகையினால் பாதிக்கப்பட்ட 7 வயது இளம் சிறுமி, ‘லைப் செல்’ தொப்புள் கொடி ரத்த சேமிப்பு வங்கியின் சமூக பொது ஸ்டெம் செல் பிரிவு மூலம் தொப்புள் கொடி பெறப்பட்டு மாற்று பதியம் செய்யப்பட்டு உயிர் பிழைத்தார். இத்தகவல் லைப் செல் நிர்வாக இயக்குனர் மயூர் அபயா தெரிவித்தார்.

குழந்தையின் தந்தை தஸ்நீம் போகரி, மயூர் அபயாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் நகரத்தைச் சேர்ந்த இச்சிறுமியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, ரத்தவியல், புற்றுநோயியல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சைக்கான லோட்டஸ் இன்ஸ்டிடியூட்டின் முதுநிலை மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழு, இரட்டை யூனிட் தொப்புள் கொடி ரத்த மாற்றுப்பதிய சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது.

பொருத்தமான எலும்பு மஜ்ஜையை தானமளிப்பவர்கள் இல்லாத காரணத்தினால் இந்த மாற்றுப்பதிய சிகிச்சை, குறிப்பாக சவால் மிக்கதாக இருந்தது. பொருத்தமான யூனிட்டுகளை பொது தொப்புள் கொடி ரத்த வங்கிகளிடமிருந்து பெறுவதற்கான செலவும் மிக அதிகமாக இருந்திருக்கும்.

லைப் செல் கம்யூனிட்டி பேங்கின் (சமூக வங்கி) உறுப்பினர்களான இச்சிறுமியின் பெற்றோர்கள் இக்குழந்தையின் உடன்பிறப்பு 50% (4/8) மட்டுமே பொருத்தமானதாக இருப்பது கண்டறியப்பட்டதற்குப் பிறகு பொருத்தமுள்ள இரு தொப்புள் கொடி ரத்த யூனிட்டுகளை வழங்குமாறு வேண்டுகோளை முன்வைத்தனர்.

தொப்புள்கொடி ரத்த மாற்றுப் பதியத்திற்கான தேவையை பூர்த்தி செய்யக்கூடிய இரு உயர்தர பொருத்தங்கள் (⅞) லைப்செல் கம்யூனிட்டி பேங்கின் பதிவகத்தில் கண்டறியப்பட்டன. பொருத்தமான இந்த யூனிட்டுகளை வேறு கூடுதல் கட்டண செலவின்றி, பெற்றோர்கள் பெற முடிந்தது என்பது இதில் முக்கியமானது. இல்லையெனில், ஒரு யூனிட்டிற்கு ரூ.45 லட்சத்துக்கும் குறைவில்லாத கட்டணத்தொகையை செலுத்த வேண்டியிருந்திருக்கும். என்றார்.

மயூர் அபயா, அதிர்ஷ்டவசமாக இச்சிறுமியின் குடும்பம், லைப்செல்லின் கம்யூனிட்டி பேங்கின் செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக இருந்தனர். இதனால் பொருத்தமான ஸ்டெம் செல்லை கண்டறிகின்ற சாத்தியக்கூறு இருந்தது என்றார் அவர்.

தஸ்நீம் போகரி பேசுகையில், இன்றைக்கு தொப்புள்கொடி ரத்த மாற்றுப் பதிய சிகிச்சையின் வழியாக எனது மகள் ஆரோக்கியமான, தரமான வாழ்க்கையை நடத்துவதற்கு உதவியிருக்கின்ற லைப் செல் உடன் இணைந்தது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார்.

மேலும் தகவல்களுக்கு : www.lifecell.in வலைதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *