செய்திகள்

கலைசார்ந்த நூல்களை பதிப்பிக்க இயல் இசை நாடக மன்றம் ரூ.10 லட்சம் நிதி உதவி

சென்னை, பிப். 2–

தமிழகத்தில் கலை சார்ந்த நூல்களை எழுதும் நூலாசிரியர்களை ஊக்குவிக்கும் வண்ணம், கருத்தாழமிக்க அரிய தமிழ் நூல்களை பதிப்பிக்க, நூல் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வீதம் 5 நூல்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கிடும் திட்டத்தை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் நிறைவேற்றிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நூலாசிரியிர்கள், தமிழில் கருத்தாழமிக்க, கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க, உறுப்பினர்-செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை- (தொ.பே.044-2493 7471. மின்னஞ்சல்- tneinm@gmail.com, tneinm@tn.gov.in) என்ற முகவரிக்கு 26–ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இத்திட்டத்தில் பங்கு பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் பெறவும் மற்றும் நிபந்தனைகள் பற்றி தெரிந்து கொள்ளவும் மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *