செய்திகள்

முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் தகவல்

செங்கல்பட்டு, அக்.6–-

செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் 2020–21ம் கல்வியாண்டிற்கான பாரத பிரதமர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் அ.ஜான்லூயிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்களின் கவனத்திற்கு 2020–21ம் கல்வியாண்டிற்கான பாரத பிரதமர் கல்வி உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது முன்னாள் படை வீரர்களின் பெண் வாரிசுகளுக்கு பிரதி மாதம் ரூ.3000, (ரூ.36,000ஆண்டுக்கு) மற்றும் ஆண் வாரிசுகளுக்கு பிரதி மாதம் ரூ.2500 (ரூ.30,000 ஆண்டுக்கு) வழங்கப்படுகிறது.

நடந்து முடிந்த 12ம் வகுப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு www.ksb.gov.in———— என்ற இணைய தளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். மேலும் விபரங்கள் அறிய காஞ்சீபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை (தொலைபேசி எண் : 044- 22262023) அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தினைச் சார்ந்த தகுதியுடைய அனைத்து முன்னாள் படை வீரர்கள், சார்ந்தோர்களின் சிறார்கள் அதிக அளவில் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *