வர்த்தகம்

குழந்தைகள் செரிமானத்துக்கு ‘அபாட்’ மாத்திரை

சென்னை, அக். 16 –

வெளிநாடுகளில் பிரபலமானது ‘கம்மி பியர்’ என்னும் ஸ்டாபெர்ரி பழச்சுவை கொண்ட குழந்தைகள் செரிமானத்தை தூண்டும் கரடி வடிவிலான மாத்திரைகள் வாயில் போட்டும் சுவைக்கும் இந்த மாத்திரைகளை அபாட் நிறுவனம் ‘துபாலாக்’ பியர்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்ட்ராபெரி பழ சுவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள DuphalacTM பியர்ஸ் ஒரு துணை உணவாகும். இது, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் விதிமுறைகளுக்கும் இணக்கமாகத் திகழ்கிறது. வயிறு செரிமான அமைப்பில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் பாதகமான பாக்டீரியாக்களின் அளவைக் குறைக்கிறது. இந்த கம்மி பியர்ஸ் குழந்தைகள் சாப்பிடுவது மிகவும் எளிதானதாகும். குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவை உயர்த்த உதவுவதோடு, பாலில் இருந்து பெறப்பட்ட லாக்டுலோஸ் என்ற ப்ரீபயாடிக்கையும் இந்த மாத்திரை பியர்ஸ் கொண்டுள்ளது, இது கால்சியத்தை உறிஞ்சுவதை அதிகரிக்க உதவுகிறது, மேலும் குழந்தைகள் வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளைப் பெறுவதை மேம்படுத்துகிறது. குழந்தை பருவ மலச்சிக்கல் பாதிப்புக்கு ஏற்றதாகும் என்று அபாட் இந்தியா மருத்துவ டைரக்டர் டாக்டர் ரூபாதாஸ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *