செய்திகள்

சிவன், எமதர்மன், சித்திரகுப்தன் வேடமிட்டு பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

காஞ்சீபுரத்தில் காவல் துறை சார்பில்

சிவன், எமதர்மன், சித்திரகுப்தன் வேடமிட்டு பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

காஞ்சீபுரம், அக்.18-

காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா உத்தரவின்பேரில், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை மேற்பார்வையில், பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், வேலாயுதம் ஆகியோர் தலைமையில், நாடகக் குழுவினருடன் இணைந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பெரிய காஞ்சீபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சீபுரம் பேருந்து நிலையம், பூக்கடை சத்திரம், ஜி.கே.மண்டபம் உள்ளிட்ட இடங்களில் கடைவீதிகள், தெருக்கள் என அனைத்து இடங்களிலும் முககவசம் அணியாதவர்களை அழைத்து, பூமாதேவி முக கவசம் அணியாதவர்களினால் பல உயிரிழப்பு ஏற்படுகிறது என்று கவலைப்படுவதாகவும், இதனால் கோபம் கொண்ட சிவன், சித்ரகுப்தனை அழைத்து எமதர்மராஜா மூலம் கவசம் அணியாதவர்களின் கழுத்தில் பாசக்கயிறு மாட்டி பரலோகத்திற்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டு அவ்வாறு பாச கயிறு மாட்டி இழுத்து செல்கின்றபோது சிவன் அவர்கள் மீது இரக்கம் காட்டி மன்னித்து முக கவசம் அணிவித்து அனுப்புவது போல விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *