செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம், விருத்தாச்சலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி ஆய்வு

கடலூர், நவ. 20

ஸ்ரீமுஷ்ணம் மற்றும் விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியம், கருவேப்பிலங்குறிச்சி ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.85.3 லட்சம் மதிப்பீட்டில் பொது குடிநீர் இணைப்பு மற்றும் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு 812 இணைப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீஆதிவராகநல்லூர் ஊராட்சியில் ரூ.1.56 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடும் பணியினை மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து கண்டியங்குப்பம் ஊராட்சியிலும் மரக்கன்று நடுதல் பணி ரூ.1.56 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருவதை பார்வையிட்டு மரக்கன்றுகளை நட்டார். மேலும் அப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.3.57 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்பு குளம் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதையும், தேத்தாம்பட்டு ஊராட்சியில் வெங்கிடிசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.12.78 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுசுவர் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து, ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தேத்தாம்பட்டு ஊராட்சியில் ரூ.18.29 லட்சம் மதிப்பீட்டில் பொதுகுடிநீர் இணைப்பு மற்றும் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு அமைக்கப்பட்டுவரும் பணியினையும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் வீடுகளையும் பார்வையிட்டார்.

அன்பின்னர் பேரூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.43.72 இலட்சம் மதிப்பீட்டில் பொது குடிநீர் விநியோகம் மற்றும் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு அமைக்கப்பட்டு வரும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அனைத்து பணிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியக்குழு தலைவர் லதா ஜெகஜீவன்ராம் , ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வகுமரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பிரபாகரன், செயல் அலுவலர் மாரீஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன், சுந்தரம், விருத்தாச்சலம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா, உதவி பொறியாளர் ஜெயச்சந்திரன், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *