செய்திகள்

மெரீனா பீச்சில் குதிரை சவாரி செய்த சத்தீஷ்கர் சிறுவன்: கீழே விழுந்து படுகாயம்

Spread the love

சென்னை, நவ. 16–

சென்னை மெரீனா கடற்கரையில் குதிரை சவாரி செய்த சத்தீஷ்கரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் குதிரை நிலை தடுமாறி கீழே விழுந்ததால் படுகாயம் அடைந்தான்.

சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது மகன் ஆதித்யா அகர்வால் (வயது 9). சத்தீஷ்கரில் உள்ள கார்மல் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான். மனோஜ் குமார் தனது குடும்பத்தினர், உறவினர்கள் 12 பேருடன் கொல்கத்தா, டெல்லி, திருப்பதி, சென்னை, கோவா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்வதற்காக கடந்த 7–ந் தேதியன்று தேதி சத்தீஸ்கரில் இருந்து புறப்பட்டார். டெல்லி சென்றுவிட்டு அங்கிருந்து 12ம் தேதி இரவு சென்னைக்கு வந்தனர்.

நேற்று மெரீனா கடற்கரையை சுற்றிப் பார்ப்பதற்காக மனோஜ் தனது குடும்பத்தாருடன் அங்கு வந்தார். மெரீனா பீச்சில் உழைப்பாளர் சிலை பின்புறம் அப்பு ராஜ் என்பவர் வைத்திருந்த குதிரையில் ஒருவர் பின் ஒருவராக சவாரி செய்துள்ளனர். இறுதியாக மனோஜின் மகன் ஆதித்யா அகர்வால் சவாரி செய்யும் போது அந்த குதிரை திடீரென நிலை தடுமாறி சிறுவனுடன் சேர்ந்து கீழே விழுந்தது. இதனைக் பார்த்த அங்கிருந்தவர்கள் விரைந்து சென்று சிறுவனை தூக்கி விட்டனர். கீழே விழுந்ததால் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவனை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *