சிறுகதை

பக்தி- ராஜா செல்லமுத்து

பக்தி என்பதும் ஆன்மீகம் என்பதும் அவரவர் மனத்தைப் பொறுத்தது. கண்ணன் ஓர் ஆத்திகவாதி கோயில் குளம் என்று எல்லா இடங்களிலும் சுற்றித் திரியக்கூடிய ஒருவன் . அவனுக்கு செவ்வாய் ,வெள்ளி என்றால் போதும். ஏதாவது ஒரு கோயில் பூஜை புனஸ்காரம் செய்து நெற்றி நிறைய விபூதி சந்தனம் குங்குமம் இட்டு கொண்டால் மட்டும் தான் அந்த வெள்ளியும் செவ்வாயும் அவனுக்கு திருப்திகரமாக இருக்கும்; இல்லை என்றால் ஏதோ ஒன்றை தொலைத்தது போலவே இருப்பான். வழக்கம் போலவே அன்று […]

சிறுகதை

பலே திருட்டு – ராஜா செல்லமுத்து

அன்று இரவு சென்னையில் இருந்து கோவைக்கு கிளம்பியது ஒரு அரசுப் பேருந்து. அன்று என்னவோ தெரியவில்லை பேருந்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அடித்து பிடித்து இருக்கைகளை பிடித்த பெண்கள் மூன்று பேர் அமரும் இருக்கையில் பெண்களும் அதற்கு பின்னால் பெண்களும் என்று நிறைய இருக்கைகளை பெண்கள் ஆக்கிரமித்து இருந்தார்கள். அதில் ரோஸ்லின் ,வேணி, கிளாரா என்று பெண்கள் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுடன் ரொம்பவும் அன்பாகவும் அனுசரித்தும் பேசினார்கள். ஆனால் இந்த மூவருக்கும் பேருந்தில் பயணம் […]

சிறுகதை

புது மனுசி – தருமபுரி சி.சுரேஷ்

மங்கா உறக்கத்திலே கனவு கண்டு கொண்டு இருந்தாள். அந்தக் கனவு அவள் வாழ்க்கையை மாற்றியது. எப்பொழுதுமே மங்கா தன் திறமை மீது நம்பிக்கை கொண்டவளாய் இருப்பவள். அவள் படிக்கும் கல்லூரியில் பேச்சு போட்டியில் கட்டுரை போட்டியில் கவிதை போட்டியில் முதல் பரிசை ஒவ்வொரு வருடமும் தட்டிச் செல்வாள். இத்திறமைகள் இருப்பதால் தன்னுடன் படிக்கும் சக மாணவிகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டாள். உண்மை என்னவென்றால் கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் திறமைகளையும் ஆற்றலையும் ஞானத்தையும் வெவ்வேறு விதங்களின் […]

சிறுகதை

விநாயகர் வேடம் – ராஜா செல்லமுத்து

பரபரப்பாக விநாயகர் வேடம் போட்டுக் கொண்டிருந்தாள் ஒப்பனையாளர் தேவி. விநாயகரை போன்ற முகம், விநாயகரை போன்ற துதிக்கை, விநாயகரை போன்ற கண்கள். கைகள், அத்தனை ஒப்பனை விஷயங்களையும் சிறுவனுக்கு போட்டுக் கொண்டிருந்தாள் தேவி. சிறுவனின் அம்மா ஒப்பனை அறைக்கும் சமையல் அறைக்கும் இடையில் நடந்து கொண்டு இருந்தாள். என்ன முடிந்ததா ? என்று சிறுவனின் அம்மா கேட்க தன்னுடைய மொத்தத் திறமையும் விநாயகரைச் செய்து கொண்டிருப்பதிலேயே முனைந்திருந்தாள் தேவி. பள்ளியிலிருந்து இதோடு நான்கு முறை ஃபோன் செய்து […]

சிறுகதை

பூங்கொத்து-ஆர்.எஸ்.மனோகரன்

அந்தப் பல்கலைக் கழக சிண்டிகேட் ஹால் வெளியே உள்ள வெயிட்டிங் ஹாலில் முரளி மனோகர் தன்னுடைய முறைக்காக காத்திருந்தார். அங்கு பொருளாதாரத் துறையில் ஒரு பேராசிரியர் காலியிடம் நிரப்ப விண்ணப்பித்த 18 பேரில் 2 பேரை தெரிவு செய்து நேர்முகத்தேர்வுக்கு அழைத்திருந்தார்கள். முரளி மனோகர் பேராசிரியர் பதவிக்கான அனைத்து கல்வித் தகுதிகளையும் அனுபவத்தையும் பெற்றிருந்தார். முரளி மனோகர், இந்த ஊர்க்காரரும் தன் நண்பருமான பிரகாஷ்காக காத்திருந்தார். அவர்கள் இருவரும் இங்கேயே சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு. அவசர அவசரமாக […]

சிறுகதை

அலட்சியம் : ராஜா செல்லமுத்து

தேவநேசனை உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துப் போக போலீஸ்காரர்கள் வந்தார்கள். ஏன்? எதற்கு? என்று அவர் கேட்பதற்குள் அவரை அடிக்காத குறையாக இழுத்துப் போனார்கள். ஏன் என் கணவர போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போறிங்க என்று மனைவி கேட்டும் அதற்கும் சரியான பதில் சொல்லாத காவல்துறை தேவநேசனை தரதரவென்று இழுக்காத குறையாக கையைப் பிடித்து இழுத்துச் சென்றார்கள். சார் நான் என்ன தப்பு பண்ணேன். என்னை ஏன் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போறீங்க ? சொல்லுங்க சார் […]

சிறுகதை

இலவசப் பயணம் – ராஜா செல்லமுத்து

தமிழகத்திலும் டெல்லியிலும் பெண்களாகப் பிறந்தால் அத்தனை பேரும் ஒரு குறிப்பிட்ட அரசு பேருந்தில் இலவசமாக செல்லலாம் என்று அரசு சட்டம் போட்டிருக்கிறது. அதனால் வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்கள் எல்லாம் எங்கேயாவது காலாறச் சுற்றி வரலாம் என்பதை போல் பஸ்ஸிலேயே நகரத்தை உலா வரலாம் என்று கிழவி முதல் சிறுமிகள் வரை கிளம்பி விடுகிறார்கள். முன்பெல்லாம் வயதானவர்களைப் பார்ப்பது அவ்வளவு அரிதாக இருந்த சென்னை நகரத்தில் இலவச பேருந்து பயணம் என்பதால் இரண்டு கைகளிலும் இரண்டு பைகளைத் […]

சிறுகதை

வழி வகுக்கும் – மு.வெ.சம்பத்

நிகிலேஷ் தான் இன்று பங்கேற்கும் விழாவில் யார் யார் என்ன தலைப்பில் பேசுகிறார்கள் என்று அழைப்பிதழைப் பார்த்தான். தனக்கு கொடுத்துள்ள தலைப்பை மறுபடியும் ஊர்ஜிதம் செய்தான். அதாவது வாழ்வில் அமைதியும் ஆனந்தமும்” என்ற தலைப்பில் பேச காலை பத்து மணியளவில் நேரம் ஒதுக்கியிருந்தாக படித்தான். சரியாக காலை ஒன்பது மணிக்கு நிகிலேஷ் கிளம்பும் போது அவன் மனைவி இன்று நாம் எனது அப்பாவைப் பார்க்கப் போகிறோம், நீங்கள் விழா முடிந்து வரும் பொழுது பழங்கள், இனிப்புகள், சிறு […]

சிறுகதை

அப்பாவின் மகள் – ராஜா செல்லமுத்து

பள்ளிக்கூடம் முடிகிறதோ இல்லையோ விறுவிறுவென ஓடி வந்து அப்பா சரவணன் கையில் இருக்கும் மொபைல் போனை எடுத்து அரை மணி நேரம் பார்த்து விட்டுத்தான் கொடுப்பாள் யுவந்திகா . அப்பா சரவணன் அதற்கு மறுப்பு ஏதும் சொல்ல மாட்டார் .தலைப்பிள்ளை யுவந்திகா என்பதால் கொள்ளை பிரியம் சரவணனுக்கு. அதனால் யாருக்காவது முக்கியமான நபர்களுக்கு பேச வேண்டி இருந்தாலும் கூட தன் மகள் பறித்துக் கொண்டு போகும் செல்போனுக்கு மறுப்பு ஏதும் சொல்ல மாட்டார். அந்த பிஞ்சுக் குழந்தை […]