வீடும் தோட்டமும் சேர்ந்தபடியே இருந்தது பாலுவின் வீடு. வீட்ற்கு முன்புறமும் பின்புறமும் மரங்கள் வைத்திருந்தார் . காய்கறிகள் செடிகள் பயிரிட்டிருந்தார். சமையலுக்கு தேவையான எதையும் அவர் வெளியில் வாங்குவதில்லை. முருங்கைக்கீரை, அகத்திக்கீரை என்ற கீரை வகைகளும் பழங்கள் காய்கறிகள் என்றும் அத்தனையும் தன் வீட்டில் இருக்கிற காலி இடத்தில் பயிரிட்டு இருந்தார் பாலு. அதோடு வேப்ப மரங்கள், தென்னை மரங்கள் என்று வீட்டை சுற்றி நட்டு இருந்தார் . வேப்ப மரத்தின் நிழலும் தென்னை மரத்தில் இளநீரும் […]