சிறுகதை ஹரிணி கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவி. அவள் படிக்கும் கல்லூரி ஒரு கலை கல்லூரி என்பதால் மாணவ-மாணவிகள் அங்கு அதிகமாக இருந்தார்கள். கொஞ்சம் நன்றாக படிக்கக்கூடிய மாணவி என்பதால் அவளை சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அவளும் தானொரு படிப்பாளி என்பதையோ, கொஞ்சம் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவள் என்பதையும் அவள் வெளிக்காட்ட மாட்டாள். எல்லோரிடமும் சாதாரணமாக பழகுவது, சாதாரணமாக பேசுவது என்று இருப்பாள். ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு மாதமும் அவரவர் வீடுகளுக்குச் செல்வார்கள். அவர்கள் […]