ஆர். முத்துக்குமார் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யாவை புறக்கணிக்கும் தீர்மானத்தை நிறைவேறிய போது, ரஷ்ய தொழில் துறையும், வங்கி சேவைகளும் சிரமப்படும் என்று உலகமே எதிர்பார்த்தது. ஆனால் ரஷ்யாவின் தொழில் துறையும், வங்கி சேவைகளும் கடந்த ஓர் ஆண்டாக எல்லா தடைகளையும் தாண்டி நன்றாகவே செயல்பட்டு வருகிறது. மேலும் ரஷ்ய நுகர்வோருக்கு தலைவலி தரும் நோக்கத்துடன் அன்றாட உபயோகப் பொருட்கள், உணவு மற்றும் காப்பீடு நிறுவனங்களும் ரஷ்யாவில் இனி சேவைகளை தொடர மாட்டோம் என்று அறிவித்து வெளியேறினர். […]