செய்திகள் நாடும் நடப்பும்

எனது உடல்நலம், எனது உரிமை


தலையங்கம்


இரு நாட்களுக்கு முன்பு, ஏப்ரல் 7, சர்வதேச சுகாதார நாள் உலகெங்கிலும் கடைபிடிக்கப்பட்டது. “எனது உடல்நலம், எனது உரிமை” என்பது இந்த ஆண்டுக்கான சுகாதார தினக் கொண்டாட்டங்களுக்கான தலைப்பாகும். அனைத்து உயிரினங்களுக்கும் தரமான சுகாதார சேவைகள் பற்றிய விழிப்புணர்வுக்கு கல்வி, தகவல் மற்றும் பாதுகாப்பான குடிநீருக்கான அணுகுமுறைகளைப் பெறுவதற்கு உலகெங்கிலும் பறந்து வாழும் அனைவரும் தமது உரிமையை வென்றெடுப்பதற்காக இந்த ஆண்டின் தலைப்பு “எனது உடல்நலம், எனது உரிமை” சரியாக தேர்வாகவே செய்யப்பட்டுள்ளது.

நாம் இயற்கையாகவே பெறவேண்டிய சுத்தமான காற்று, நல்ல ஊட்டச்சத்து, தரமான வீடுகள், வேலை – சுற்றுச்சூழல் நிலைமைகள் , பாகுபாட்டிலிருந்து சுதந்திரம். உலகெங்கிலும் வாழும் மில்லியன் கணக்கான மக்களை ஆரோக்கியத்திற்கான உரிமை பெருகிய முறையில் பெரும் அச்சுறுத்தலுக்கு உலகமே உள்ளாகி வருகிறது என்பதை நாம் அறிவோம்.

நோய்கள், வெள்ளம் புயல் போன்ற இயற்கை பேரழிவுகள், அவற்றைத் தொடர்ந்த மரணம் ,இயலாமைக்கான காரணங்கள். இவை தவிர இயற்கை நோய்கள் மனிதனுக்கு மிகவும் தீங்கு மற்றும் கவலையை ஏற்படுத்தும் ஆபத்துக்கள் ஒருபுறம் இருக்க புதைபடிவ எரிபொருட்களை எரிப்பது போன்றவை காலநிலை நெருக்கடியை உந்தித் தள்ளுவதால் சுத்தமான காற்றை சுவாசிக்கும் நமது உரிமையைப் பறிக்கிறது என்பதையும் நாம் உணர வேண்டும்.

உட்புற மற்றும் வெளிப்புற காற்று மாசுபாடு ஒவ்வொரு 5 வினாடிக்கும் ஒரு உயிரைப் பறிக்கிறது என்கிற அறிக்கை கவலை தரும் விஷயம். நோயற்ற உலகத்திற்கான நமது நாளைய கனவுக்கு எவ்வாறு நாமே பங்களிக்க முடியும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக கை கழுவுதலின் முக்கியத்துவம் என்ற தலைப்பு, மருத்துவரை அணுகும்போது அவரது கிளினிக்கில் கூட கை கழுவுவது எப்படி? என்கிற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.

இப்போது தெரிந்து கொள்வோம் ; கை கழுவுவதன் முக்கியத்துவத்தை. கோவிட் 19 தொற்று காட்டுத்தீயாக உலகெங்கும் பரவிய காலத்தில் உயிர் இழப்பு ஏற்படும் என்ற பெரும் அச்சத்தில் கை கழுவுதல் போன்றவை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும் கை கழுவுதல் என்பது ஒரு பிறவி பழக்கமாக இருக்க வேண்டும். அது எந்த நேரத்திலும் நம்மால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அசுத்தமான கைகளால் பல தொற்று நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடும் என்பதால் கை கழுவுதல் அத்தகைய தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க முதல் படியாக உதவுகிறது. இந்த நோய்களில் சால்மோனெல்லோசிஸ் போன்ற இரைப்பை குடல் நோய்த்தொற்றுகள், சளி மற்றும் கொரோனா வைரஸ் (COVID-19) போன்ற சுவாச தொற்றுகள் அடங்கும்.

வீட்டில் உள்ள முதியவர்களும் குழந்தைகளும் இதுபோன்ற நோய்த்தொற்றுகளாலும் அது தொடர்பான சிக்கல்களாலும் அவதிப்படும்போது, அமைதியாகப் பார்வையாளர்களைப் போல் யார்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்? சோப்பு கலந்த தண்ணீருடன் கைகளை முறையாக கழுவுவதன் மூலம் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம். பார் மற்றும் திரவ சோப்பு இரண்டும் கிருமிகளை அகற்ற நன்றாக வேலை செய்கிறது. இன்னும் பல சந்தர்ப்பங்களில், சுகாதார விதிகளைக் கடைபிடிப்பதற்காக கைகளைக் கழுவ வேண்டும் என்றாலும் பின்வருபவை பொதுவாக நாம் பின்பற்ற வேண்டியவை:

உணவு தயாரிப்பதற்கு முன் மற்றும் சாப்பிடுவதற்கு முன், இருமல் அல்லது தும்மல் வந்தபின்னர்,

கைக்குட்டை, டிஷியூ தாள்களை களைப் பயன்படுத்திய பிறகு, நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையானவற்றை மேற்கொண்ட , முன்னும் பின்னும்

வயல்களில், தோட்டங்களில், மாடித் தோட்டங்களில் வேலை செய்த பிறகு, விலங்குகளைக் கையாண்ட பிறகு, வீட்டிற்கு வந்ததும் பிற இடங்களுக்கு அல்லது வேலைக்குச் சென்றால்

நாப்கின்களை மாற்றிய பிறகு கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு புகைபிடித்த பிறகு

உடலில் பட்ட காயங்கள், வெட்டுக்கு முன்னும் பின்னும் குப்பையைத் தொட்ட பின் தவிர கைகளைக் கழுவாமல் கண், வாய் தொடர்பான சில பகுதிகளைத் தொட்டால், சில நோய்கள் தொற்றக் காரணமாக இருக்கலாம் என்பதால் கண்கள், மூக்கு மற்றும் வாய் போன்றவற்றை தொடுமுன்னர் தண்ணீரால் கைகளைக் கழுவ பரிந்துரைக்கப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக அற்புதமான கைகளைக் கழுவும் சுகாதாரம் நமக்கு நல்கும் இன்னொரு பயன்: காய்ச்சல், உணவில் விஷம் மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய இதர நோய்த்தொற்றுகள் கைகழுவுதலின் மூலம் சில நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்பது உறுதி. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, வழக்கமான கை கழுவுதல் கிருமிகளை அகற்றவும் நோய்வாய்ப்படாமல் இருக்கவும் மற்றவர்களுக்கு நோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்கவும் சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

நாம் வீட்டில் இருந்தாலும் வேலையில் இருந்தாலும் வெளியூரில் இருந்தாலும் கப்பலில் இருந்தாலும் விமானத்தில் பயணித்தாலும் சரி, சோப்பு மற்றும் தண்ணீரால் கை கழுவுவது நம்மையும் நம் குடும்ப உறுப்பினர்களையும் எப்படி எப்படியெல்லாம் நம்மை நோய்களினின்று பாதுகாக்கும் என்பதைப் அறிந்து கொள்வோம்.

தண்ணீரில் கைகழுவுவது நமது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க முதல் படி என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம் “மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு தேர்தலுக்குமுன்னர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளிலிருந்து கைகழுவ வேண்டாம்,” என்கிறார் சீனியர் அரசியல்வாதி ஒருவர்.

சுருக்கமாகச் சொன்னால், நாம் யாராக இருந்தாலும் சரி, நம்மைச் சுற்றி ஆரோக்கியத்தின் மிக உயர்ந்த தரத்தை அடைய நமக்கு முழு உரிமை உள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் மருத்துவச் செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 மில்லியன் மக்களைக் கடுமையான வறுமையில் தள்ளுகின்றன என சுட்டிக்காட்டி இருக்கிறது.

கைகழுவுவது நமது உடல்நலம் ;நமது உரிமை என்பதை அறிவோம் : எந்த இடத்தில் இருந்தாலும் தண்ணீரால் கை கழுவிவிட்டு உணவருந்துவோம் : நம்மையும் நம் குடும்ப உறுப்பினர்களையும் பாப்போம்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *