செய்திகள் போஸ்டர் செய்தி

பெட்டி நிறைய ஐஸ்கிரீம் கொடுத்து சீன அதிபரை குஷிப்படுத்திய ரஷ்ய அதிபர்!

துசான்பே, ஜீன்.16– ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டின், தஜிகிஸ்தான் நகரில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்கு வந்து சீன நாட்டின் பிரதமர் ஜி ஜின்பிங்கிற்கு ஒரு சூட்கேஸ் அளவிலான பெட்டியில் ஐஸ்கிரீமை பரிசாக வழங்கினார். சீன அதிபருக்கு 66-வது பிறந்த நாள் என்று கேள்விப்பட்டதும் அவருக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த ரஷ்ய அதிபர், “உங்களைப் போன்று ஒரு நண்பனை அடைந்து இருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி” என்று பெருமிதத்தோடு கூறினார். அவருடைய பிறந்த நாள் பரிசாக அவரே […]

போஸ்டர் செய்தி

மிஸ் இந்தியா அழகிப் போட்டி: ராஜஸ்தானை சேர்ந்த சுமன்ராவ் தேர்வு

புதுடெல்லி,ஜூன்.16– இந்த ஆண்டுக்கான மிஸ் இந்தியா போட்டியில் ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ராவ் வெற்றிபெற்றுள்ளார். மும்பையில் நேற்று நள்ளிரவில் மிஸ் இந்தியா இறுதிப்போட்டி நடந்தது. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல பெண்கள் கலந்து கொண்டனர். இந்த பட்டத்திற்கான இறுதி போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுமன் ராவ் என்ற 22 வயது இளம்பெண் பட்டத்தை தட்டிச் சென்றார். 2018ம் ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ், சுமன் […]

போஸ்டர் செய்தி

நீட் தேர்வு ரத்து உட்பட 29 கோரிக்கைகள்: பிரதமர் மோடியிடம் எடப்பாடி வலியுறுத்தல்

புதுடெல்லி, ஜூன்.16– தமிழக குடிநீர் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் உட்பட 29 கோரிக்கைகளை நிறைவேற்ற பிரதமரிடம் வலியுறுத்தினோம் என்று டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:– கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – பாலாறு – காவேரி – வைகை – குண்டாறு […]

போஸ்டர் செய்தி

காதலன் அரிவாளால் வெட்டிய பெண் அதிகாரி: மருத்துவமனையில் நேரில் பார்த்து ரெயில்வே டிஜிபி சைலேந்திரபாபு விசாரணை

சென்னை, ஜூன் 15 அரிவாளால் காதலன் வெட்டியதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண் தேனிமொழியை ரெயில்வே போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை நேரில் சென்று பார்த்தார். டாக்டர்களிடம் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், அவரது நிலைமை தற்போது எப்படி உள்ளது என்பது பற்றியும் கேட்டறிந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் சைலேந்திரபாபு கூறுகையில், தேன்மொழியின் உயிருக்கு ஆபத்தில்லை. அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். நலமாக உள்ளார். நன்றாக பேசுகிறார் என தெரிவித்தார். விரைவில் அனைத்து ரெயில் […]

போஸ்டர் செய்தி

சென்னையில் போலீசாரை அரிவாளால் தாக்கி தப்பி ஓட முயன்ற ரவுடி சுட்டுக்கொலை

சென்னை, ஜூன் 15 சென்னையில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி வல்லரசு போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தான். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி வல்லரசு (வயது 24). இவன் மீது ஒரு கொலை வழக்கும் மற்றும் கொலை முயற்சி, கொள்ளை என்று 10க்கும் மேற்பட்ட வழக்குகள் வியாசர்பாடி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து ரவுடி வல்லரசுவை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் […]

போஸ்டர் செய்தி

டெல்லியில் மோடியை சந்தித்தார் எடப்பாடி

புதுடெல்லி, ஜூன் 15 டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைகள், திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவை அளித்தார். பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 2வது முறையாக வெற்றி பெற்று தனி பெருமான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. புதிய அரசு பதவி ஏற்ற பின்னர் முதல்முறையாக நிதி ஆயோக் கூட்டம் […]

போஸ்டர் செய்தி

குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.15 ஆயிரம் பரிசு: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

குண்டூர்,ஜூன்.15– குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோருக்கு ஆண்டு தோறும் ரூ.15 ஆயிரம் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.ஆந்திரா சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். ரே‌ஷன் பொருட்கள் வீட்டுக்கு நேரடியாக வரும் என்பது போன்ற திட்டங்களை அறிவித்து வருகிறார். இதற்கிடையே கல்வி அறிவில் ஆந்திர மாநிலம் […]

போஸ்டர் செய்தி

ஜோ ரூட் அதிரடி: இங்கிலாந்து வெற்றி

சவுதாம்டன், ஜூன் 15– நேற்று நடைபெற்ற போட்டியில் ஜோ ரூட்டின் அதிரடி சதத்தால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் வீத்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 19வது லீக் போட்டி நேற்று சவுதாம்டனில் நடந்தது. இதில் இங்கிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சந்தித்தன. ‘பூவா தலையா’ போட்டதில் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்களில் லூயிஸ் (2) விக்கெட்டை இழந்தது. […]

செய்திகள் போஸ்டர் செய்தி

பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை

பிஷ்கெக், ஜூன்.14– பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்தும், ஒற்றுமையுடனும் போராட வேண்டும் என ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகரில் ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த அமைப்பில் இந்தியா, சீனா, ஈரான், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த மாநாட்டில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது:– பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்று […]

செய்திகள் போஸ்டர் செய்தி

கேரளாவில் மேலும் 47 பேருக்கு நிபா காய்ச்சல் அறிகுறி

திருவனந்தபுரம்,ஜூன்.14– கேரளாவில் ரத்த பரிசோதனை முடிவுகள் வெளியானதில் மேலும் 47 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதில் நர்சு உள்பட 7 பேர் பலியானார்கள். அதன் பிறகு நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டும் கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் மீண்டும் பரவியது. கொச்சியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிறகே இதுபற்றி தெரிய வந்தது. தற்போது அந்த […]