செய்திகள்

தங்கம் விலை சவரன் ரூ.39,000; ஒரே நாளில் ரூ.616 அதிகரிப்பு

சென்னை, மார்ச் 2– சென்னையில் மூன்றாவது நாளாக விலை அதிகரித்த தங்கம் விலை, இன்று ஒரே நாளில் ரூ.616 அதிகரித்து, சவரன் ரூ.39000 தொட்டுள்ளது. ரஷியா-உக்ரைன் போர் பதற்றம் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. கடந்த 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும் தாண்டியது. சவரனுக்கு ரூ.616 உயர்வு இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், சென்னையில் ஆபரணத் […]

செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 200 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் சென்னை, மார்ச்.2- சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தேர்ந்தெ 200 கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு ககன்தீப் சிங்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளின் கவுன்சிலர் பதவிக்காக 2 ஆயிரத்து 670 பேர் தேர்தல் களத்தில் போட்டியிட்டனர். இந்த நிலையில் […]

செய்திகள்

உக்ரைன் கெர்சன் நகரை முழுமையாகக் கைப்பற்றியது ரஷ்யா

போலீஸ் தலைமை கட்டிடத்தில் ராக்கெட் தாக்குதல் கிவ், மார்ச் 2– தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷிய ராணுவம் முழுமையாக கைப்பற்றியது. கார்கிவில் போலீஸ் தலைமையகத்தில் ரஷிய ராணுவம் ராக்கெட் மூலம் பயங்கர தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. அந்த கட்டிடம் முழுவதும் எரிந்த நிலையில், தற்போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய […]

செய்திகள்

உக்ரைன் போர்: பெலாரஸ் அணியுடன் நடக்க இருந்த கால்பந்து போட்டியை ரத்து செய்தது இந்திய

சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவுக்க தடை புதுடெல்லி, மார்ச் 2– உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தாக்கல் நடத்திவருவதையொட்டி மார்ச் 26 ஆம் தேதி திட்டமிடப்பட்டுயிருந்த பெலாரஸ் உடனான கால்பந்து போட்டியை இந்திய ஆண்கள் அணி ரத்து செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 7-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து […]

செய்திகள்

ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக உக்ரைன் வழக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் மார்ச் 7, 8 விசாரணை

கீவ், மார்ச் 2– ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தொடர்ந்த வழக்கு மார்ச் 7, 8 ந்தேதிகளில் விசாரணைக்கு வர உள்ளது. நேட்டோ படைகளுடன் உக்ரைன் இணையும் திட்டத்தை எதிர்த்து வந்த ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த வாரம் போர் தொடுத்தது. போர் தொடுக்கப்பட்டு இன்றுடன் 7 நாட்கள் ஆன நிலையில், பெரும்பாலான முக்கிய நகரங்கள் ரஷ்ய படைகள் வசம் வந்துவிட்டன. தலைநகர் கீவ்–இல் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. 7, 8 […]

செய்திகள்

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு புதின் அதிக விலை கொடுக்க நேரிடும்: ஜோ பிடன் எச்சரிக்கை

நியூயார்க், மார்ச் 2– உக்ரைன் தாக்குதலுக்கு புதின் அதிக விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 7 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகள், குடியிருப்பு பகுதிகள் என ரஷ்ய படைகள் தாக்கி அழித்து வருகின்றன. அதேபோல், ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் பதில் தாக்குதல் கொடுத்து வருகிறது. அதே நேரத்தில், […]

செய்திகள்

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க மாட்டோம்: துருக்கி

அன்கரா, மார்ச் 2– உக்ரைன் மீது போர் தொடர்ந்துள்ள ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க துருக்கி மறுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும் ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யாவின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக, பல நாடுகள் ரஷ்ய விமானங்களுக்கு தடை, விளையாட்டு போட்டிகளில் தடை போன்றவற்றை அறிவித்து வருகின்றன. தடை விதிக்கவில்லை ஏன்? இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க […]

செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா இடையே இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுமா? கீவ், மார்ச் 2– கீவ் நகரில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வரக்கூடிய சூழலில், உக்ரைன் – ரஷ்யா இடையே இன்று 2 ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. உக்ரைன் ரஷ்யா மீது 7ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. தலைநகர் கீவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. […]

செய்திகள்

உக்ரைனில் உள்ள இந்தியர்களை 3 நாளில் மீட்க விமானப்படை தீவிரம்

கீவ், மார்ச் 2– உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கீவ் நகரிலிருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறிவிட்டதாகவும், அவர்களை 3 நாட்களில் மீட்க இந்திய விமானப்படையின் 26 விமானங்கள் புறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்புத் தெரிவித்து பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகின்றன. ஏழாவது நாளாக இன்றும் தாக்குதலைத் தொடர்ந்துள்ளது ரஷ்யா. இதனிடையே ரஷ்யாவின் தாக்குதலால் நேற்று கார்கிவ் நகரில் ஆளுநர் மாளிகைக்கு அருகே […]

செய்திகள்

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 3வது வாரத்தில் தொடங்குகிறது

சென்னை, மார்ச்.2- தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 3வது வாரத்தில் தொடங்க உள்ளது. நடப்பு ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 5-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 2 நாட்கள் நடைபெற்றது. அந்த கூட்டத்தொடரில் 15 சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் நீட் […]