செய்திகள்

சபாநாயகர் அறிவிப்பை எதிர்த்து உத்தவ் தாக்கரே சுப்ரீம் கோர்ட்டில் மனு

மும்பை, ஜன. 16– மகாராஷ்டிரா சபாநாயகர் அறிவிப்பை எதிர்த்து உத்தவ் தாக்கரே சுப்ரீம் கோர்ட்டில் மனு. மகாராஷ்டிராவில் கடந்த 2022-ம் ஆண்வு ஜூன் 21-ம் தேதி அன்று சிவசேனா இரண்டாகப் பிரிந்தபோது, உண்மையான சிவசேனா அரசியல் கட்சியாக ஷிண்டே அணி இருந்தது. ஷிண்டே முகாம் எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க மனுக்களை சபாநாயகர் ராகுல் நார்வேகர் தள்ளுபடி செய்தார். ஏக்நாத் ஷிண்டே குழு சிவசேனா அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் சிவசேனாவின் தலைவராக உள்ள […]

Loading

செய்திகள்

மாடுகளை அழகுப் படுத்தி விவசாயிகள் பூஜை; தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

தஞ்சாவூர் பெரிய கோவில் நந்திக்கு 2 டன் காய்கறி, பழங்களால் அலங்காரம் சென்னை, ஜன. 16– தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாட்டாடப்பட்டது. தைப்பொங்கல் தினத்தில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் வண்ணம், பொங்கல் படையலிட்டு அனைவரும் வணங்கினர். அதனை தொடர்ந்து 2ம் நாளில் மாட்டு பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழர்களால் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. விவசாயிகளின் நண்பன், உழவனின் உயிர்த்தோழனாக […]

Loading

செய்திகள்

மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த விரும்புகிறோம்: ராகுல் காந்தி பேச்சு

கரோங், ஜன. 16– மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சி இருப்பதாகவும், மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த விரும்புவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2 ஆம் கட்ட பயணத்தை மணிப்பூரில் இருந்து மும்பை வரை மேற்கொண்டு வருகிறார். ஜனவரி 14-ம் தேதி இந்திய நீதிப் பயணத்தை தொடங்கிய நிலையில், மணிப்பூரின் கரோங் நகருக்கு அவரது பயணம் வந்தது. […]

Loading

செய்திகள்

மதுரா மசூதியில் கள ஆய்வு: அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கு தடை

உச்ச நீதின்றம் இன்று அதிரடி உத்தரவு டெல்லி, ஜன. 16– உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள ஷாயி ஈத்கா மசூதியில் ஆய்வு செய்வதற்காக ஆணையரை நியமிக்கும் அலகாபாத் உயர் நீதிமன்ற அனுமதிக்கு, உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலக் தடைவிதித்துள்ளது. கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் மதுரா, உத்தரபிரதேசத்தின் புனித நகரமாக கருதப்படுகிறது. இங்குள்ள பழமையான கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலின் ஒரு பகுதி 1669-70-ல், முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்டதாகவும், பிறகு அந்த பாதி நிலத்தில் […]

Loading

செய்திகள்

திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது: முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை, ஜன. 16– திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் திருவள்ளுவர் பிறந்த நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் நாளில் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, காவி உடையுடன் உள்ள திருவள்ளுவர் புகைப்படத்தை […]

Loading

செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்: விலகுவதாக இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி அறிவிப்பு

நியூயார்க், ஜன. 16– அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக உள்ளார். அவரது பதவிக்காலம் நடப்பு ஆண்டோடு முடிவடையவுள்ளதால், அதிபர் தேர்தல் களம் அமெரிக்காவில் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்திய வம்சாவளி விலகல் அமெரிக்க அதிபர் வேட்பாளர் […]

Loading

செய்திகள்

மொசாத் உளவுத்துறை தலைமையகம் மீது தாக்குதல்: ஈரானுக்கு அமெரிக்கா கண்டனம்

நியூயார்க், ஜன. 16– ஈரான் மீதான ஈராக் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த நிலையில், அமெரிக்கா ஈரானை கண்டித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் பரவும் நிலை தொடர்ந்து உருவாகி வருவது, உலக நாடுகளிடையே அச்சத்தை அதிகரித்திருக்கிறது. ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் வரை பல்லாயிரக் கணக்கான மக்கள் பலியான நிலையில், இன்றளவும் போர் தொடந்து வருகிறது. இதற்கிடையில், சோமாலியா கடல் கொள்ளையர்களைக் கட்டுப்படுத்துவதாக ஏமன் மீது அமெரிக்கா […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 189 பேருக்கு கொரோனா: 3 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 5 பேருக்கு தொற்று டெல்லி, ஜன.16– இந்தியாவில் புதிதாக 189 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2804 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 375 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் […]

Loading

செய்திகள்

இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டைமான் காளைகளுடன் கொண்டாடிய மாட்டு பொங்கல்

சிவகங்கை, ஜன. 16– இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான் சிவகங்கை மாவட்டதில் உள்ள தனது சொந்த கிராமத்தில் 10 காளைகளுடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடினார். விவசாயத்திற்கும், கதிரவனுக்கும் நன்றி தெரிவிக்கும் பொங்கல் திருநாள், நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு உற்ற துணையாகத் திகழும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் மாடுகளை குளிப்பாட்டியும், கொம்புகளுக்கு வண்ணம் பூசி, மாலை அணிவித்தும் அலங்கரித்தனர். பின்னர் கரும்பு, […]

Loading

செய்திகள்

டெல்லியில் கடும் பனிமூட்டம்: இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட்; 17 விமானங்கள் ரத்து

டெல்லி, ஜன. 16– டெல்லியில், கடும் பனிமூட்டம் காரணமாக 30 விமானங்கள் தாமதாகியுள்ளதுடன், 17 விமானங்களின் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் நேற்றும், நேற்று முன் தினமும் போகி பண்டிகையால் உருவாக புகைமூட்டத்துடன் பனிமூட்டமும் சேர்ந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டு, விமானங்கள் தாமதமானதைப் போலவே டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், அரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக அதிகாலை நேரங்களில் மக்கள் வெளியே வர […]

Loading