செய்திகள்

சிறுவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் ஒருவருடம் பதிவு சான்று ரத்து

சென்னை, பிப். 6– சிறுவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் ஒருவருடம் பதிவு சான்று ரத்து செய்யப்படுகிறது. தமிழகத்தில் வாகன விபத்தில் உயிர் இழப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சாலை விபத்துகளும் அதிகளவில் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் கூட விபத்து குறையவில்லை. சமீப காலமாக 18 வயதுக்கு குறைந்த மைனர்கள் வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்து ஏற்படுகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காயமடைந்தாலோ அல்லது இறந்தாலோ வாகனத்தை மைனர் அல்லது யாரேனும் […]

Loading

செய்திகள்

இமாச்சலபிரதேசத்தில் கார் விபத்து: சைதை துரைசாமி மகன் வெற்றியை தேடும் பணி 3-வது நாளாக தீவிரம்

சென்னை, பிப். 6– இமாச்சலபிரதேசத்தில் கார் விபத்தில் காணாமல் போன சைதை துரைசாமி மகன் வெற்றியை தேடும் பணியில் 3வது நாளாக பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (வயது 45) தொழில் அதிபரான இவர் தந்தையுடன் சேர்ந்து மனித நேய பயிற்சி மையத்தை கவனித்து வருகிறார். பிரபல சினிமா இயக்குனர் வெற்றி மாறனிடம் பயிற்சி பெற்றுள்ள வெற்றி கடந்த 2021-ம் ஆண்டு விதார்த்-ரம்யா […]

Loading

செய்திகள்

கெஜ்ரிவாலின் செயலாளர், ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

புதுடெல்லி, பிப். 6– டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர், ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள் சிலரின் வீடுகளில் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினர். டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளின் 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு புதிய மதுபான கொள்கை நிறைவேற்றியதில் முறைகேடு நடந்திருப்பத எழுந்த புகாரில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் 5 முறை […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

சென்னை, பிப்.6– இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 830 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 70 காசுகள் குறைந்து 76 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.76,000-க்கு விற்பனையாகிறது.

Loading

செய்திகள்

பஞ்சாப், அரியாணாவில் கடும் குளிர்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அமர்தசரஸ், பிப்.6– பஞ்சாப் மற்றும் அரியாணாவில் பெரும்பாலான பகுதிகளில் குளிர்ந்த காலநிலை தொடர்ந்து நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸ் 5.5 டிகிரி செல்சியசாகவும், லூதியானா மற்றும் பாட்டியாலாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.9 மற்றும் 5.6 டிகிரியாகவும் உள்ளது. இது இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் குறைவாகும். பதிண்டா, பரித்கோட் மற்றும் குர்தாஸ்பூரில் முறையே 3, 3.5 மற்றும் 4 டிகிரி செல்சியஸ் குளிர் காலநிலை நிலவுகிறது. அண்டை மாநிலமான […]

Loading

செய்திகள்

மே மாத இறுதிக்குள் இந்திய படைகள் மாலத்தீவில் இருந்து வெளியேறும்

நாடாளுமன்றத்தில் அதிபர் முகமது மொய்சு பேச்சு மாலி, பிப். 5– மே மாத இறுதிக்குள் இந்திய படைகள் மாலத்தீவில் இருந்து வெளியேறும் என்று அந்நாட்டு அதிபர் முகமது மொய்சு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சீன ஆதரவாளரான முகமது மொய்சு, மாலத்தீவு அதிபரானதை அடுத்து அந்நாட்டில் இருக்கும் இந்திய ராணுவத்தை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முகமது மொய்சு, மாலத்தீவு விவகாரங்களில் தலையிடவோ, அதன் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ எந்த நாட்டையும் […]

Loading

செய்திகள்

பெருந்துறையில் 16,000 பெண்கள் பங்கேற்று வள்ளி கும்மியாட்டம் ஆடி கின்னஸ் சாதனை

ஈரோடு, பிப். 05– வள்ளி கும்மியாட்டத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநாட்டில் 16 ஆயிரம் பெண்கள் ஒன்று கூடி ஆடி உலக சாதனை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளனர். கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டத்தில் மிகவும் பாரம்பரிய கலைகளில் ஒன்றான வள்ளி கும்மியாட்டம் கலை மீதான ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வள்ளி கும்மியாட்டம் உலக முழுவதும் பறைசாற்றும் விதமாக, […]

Loading

செய்திகள்

அதானி குழுமத்தின் மிகப் பிரமாண்ட காப்பர் ஆலை: மார்ச் மாதத்தில் உற்பத்தி பணிகள் துவக்கம்

அகமதாபாத், பிப்.5– குஜராத் மாநிலம் முந்த்ராவில் 1.2 பில்லியன் டாலர் மதிப்பில் மிகப் பெரிய தாமிர உற்பத்தி ஆலையை அதானி குழுமம் அமைத்துள்ளது. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் இந்தியாவின் காப்பர் இறக்குமதி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துறைமுகம், நிலக்கரி, விமான நிலையம், எரிசக்தி என பல்வேறு துறைகளில் அதானி குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது தாமிர உற்பத்தியிலும் இறங்கியுள்ளது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் உலகநாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இந்தியா […]

Loading

செய்திகள்

இனப்பாகுபாடு கொடுமை அனுபவித்தேன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தகவல்

லண்டன், பிப். 05– இங்கிலாந்தின் இந்திய வம்சாவளி பிரதமரான ரிஷி சுனக் தன்னுடைய சிறுவயதில் இன பாகுபாட்டை சந்தித்துள்ளதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் பிரதமராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரிஷி சுனக். இவர் பிரிட்டனின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார். ரிஷி சுனக்கின் குடும்பத்தினர் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஆப்பிரிக்காவில் இருந்த இவரின் குடும்பத்தினர் 1960 ஆம் ஆண்டுகளில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ரிஷியின் அப்பா ஒரு […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 122 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, பிப். 05– இந்தியாவில் புதிதாக 122 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1575 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 188 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,26,314 […]

Loading