செய்திகள்

பிரதமரும், நிதியமைச்சரும் பொருளாதாரம் படிக்காதவர்கள்

சுப்பிரமணிய சாமி விமர்சனம் டெல்லி, பிப். 02– பிரதமரும், நிதியமைச்சரும் பொருளாதாரம் படிக்காதவர்களாக இருக்கும் போது வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்று சுப்பிரமணிய சாமி விமர்சனம் செய்துள்ளார். 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதி அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது:– வேறென்ன எதிர்பார்க்க முடியும்? மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து எனது பதிலைக் கேட்பதற்காக […]

Loading

செய்திகள்

பெற்றோரிடம் மன்னிப்புக் கோரிய முகநூல் அதிபர் மார்க் ஜக்கர்பர்க்

நியூயார்க், பிப். 02– சமூக வலைதளங்களில் குழந்தைகள் பாதுகாப்பிற்கான வசதிகள் தொடர்பான விசாரணையின்போது மெட்டா நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் எழுந்து நின்று பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டார். தற்போதைய சமூகத்தினர் சமூக வலைதளங்களில் பல மணி நேரம் செலவழிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகளும் இதற்கு அடிமையாகி விடுகின்றனர். இதனால் பல்வேறு விதமான பிரச்னைகள் எழுகின்றன. இதையடுத்து, சமூக வலைதளங்களில் போதுமான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இல்லாததால் குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினர் சைபர் புல்லியிங் எனப்படும் இணைய மிரட்டல்களுக்கும், பாலியல் […]

Loading

செய்திகள்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை, பிப்.2- மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய ‘பட்ஜெட்’ குறித்து முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-– 2-வது முறையாக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பா.ஜனதா அரசு, ஆட்சிக்காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையை தாக்கல் […]

Loading

செய்திகள்

அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் வழக்கு: விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

ஜார்க்கண்ட் ஐகோர்ட் செல்ல அறிவுரை புதுடெல்லி, பிப்.2 அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சியில் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார். இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் ஹேமந்த் சோரனிடம் நேற்று முன் தினம் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

நாட்டின் பாதுகாப்பு சவால்

தலையங்கம் இன்று சமர்ப்பிக்கப்பட இருக்கும் பட்ஜெட் முழுமையான பட்ஜெட் கிடையாது, மூன்று மாதங்களில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான செலவினங்களுக்கும், அரசு இயந்திரம் தொடர்ந்து நடைபோட வேண்டிய நிதி ஆதாரங்களுக்கும் ஒதுக்கீடுகள் மட்டுமே இருக்கும். பொதுமக்கள் விரும்பும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற சலுகைகள் இருக்குமா? என்று ஆவலோடு எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றம் பெறுவார்கள். ஆனால் பெட்ரோல் விலையும், வங்கிக்கடன் வட்டி விகித மாற்றமும் நிதி அமைச்சரின் முடிவாக இருப்பதில்லை. அவை அத்துறை சார்ந்த நிபுணர் குழுவே […]

Loading

செய்திகள்

ஜனவரி மாதத்தில் 84.63 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம்

சென்னை, பிப்.1– சென்னை மெட்ரோ ரெயில் ரெயிலில் கடந்த டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 5 லட்சத்து 28 ஆயிரத்து 914 பயணிகள் அதிகமாக பயணித்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 1–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை மொத்தம் 84 லட்சத்து 63 ஆயிரத்து 384 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக கடந்த 12 அன்று 3 லட்சத்து 64 ஆயிரத்து 521 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஜனவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் […]

Loading

செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நாளை தொடங்குகிறது

விசாகப்பட்டிணம், பிப். 1– இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நாளை தொடங்குகிறது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்கிஸில் 246 ரன்னும், இந்திய அணி 436 ரன்னும் எடுத்தன. பின்னர் 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் […]

Loading

செய்திகள்

அக்னிபாத் திட்டம்: நாட்டுப்பற்றுள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி

பாஜக மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு டெல்லி, பிப். 01– அக்னிபாத் திட்டம், நாட்டுப்பற்றுள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம் மட்டுமல்ல, இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நாட்டின் புனிதமான உணர்வுகளுக்கு இழைக்கும் துரோகம்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:– ‘ஆயுதப்படையில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 1.5 லட்சம் இளைஞர்களை தற்காலிக ஆள்சேர்ப்பு அக்னிபாத் திட்டம் என்ற பெயரில் ஆதரவற்றவர்களாக விடப்பட்டுள்ளது அவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் […]

Loading

செய்திகள்

சீனாவுக்கு உளவு பார்த்ததாக கைதான புறா: 8 மாதங்களுக்கு பிறகு விடுதலை

மும்பை, ஜன. 01– சீனாவுக்காக உளவு பார்த்ததாக 8 மாதங்களுக்கு முன் பிடிக்கப்பட்ட புறா விடுவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் மும்பை புறநகர் பகுதியான செம்பூரில் உள்ள பிர் பாவ் ஜெட்டியில் ஆர்சிஎஃப் போலீசாரால் புறா பிடிக்கப்பட்டது. புறாவின் காலில் இரண்டு மோதிரங்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், அதில் ஒன்று செம்பு மற்றும் மற்றொன்று அலுமினியம் என்றும் போலீசார் தெரிவித்தனர். அதன் இரு இறக்கைகளுக்கும் கீழே, சீன மொழியைப் போன்ற ஸ்கிரிப்ட்டில் செய்திகள் எழுதப்படிருந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Loading

செய்திகள்

ரூ.1.8 லட்சம் மோசடி எதிரொலி: ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா?

போலீஸ் தீவிர விசாரணை சென்னை, பிப். 1– ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாக ரூ.1.8 லட்சம் மோசடி நடந்ததைத் தொடர்ந்து ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீதரன் (வயது 51) என்பவர் ரயில் மூலம் நாகர்கோயில் செல்லவிருந்த தனது ரயில் பயணத்தை ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரத்து செய்துள்ளார். அப்போது ஐஆர்சிடிசி இணையதளத்தில் உதவிக்கு என்று இருந்த 9832603458 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு […]

Loading