செய்திகள்

2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது: சிபிஎஸ்இக்கு ஹைகோர்ட் உத்தரவு

சென்னை: 2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்பதை நாடு முழுவதும் விளம்பரம் செய்ய சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பாடச்சுமையை குறைக்க கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட் நீதிபதி கிருபாகரன் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவில் கண்டிப்பு காட்ட வேண்டும் என்றார். 2ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கூடாது என்பதை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் […]

செய்திகள்

இந்தோனேஷிய நிலநடுக்கம் 5 பேர் பலி

மாதரம்: தென் கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவின், லம்போக் தீவில், அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதில், ஐந்து பேர் பலியாகினர். இந்தோனேஷியாவின் சுற்றுலா தலமான லம்போக் தீவில், சமீபத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில், 500 பேர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, இந்தோனேஷியாவின் லம்போக் தீவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவுகோலில், 6.9 ஆக பதிவானது.இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, ஐந்து முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் […]

செய்திகள்

ஒரே நாளில் 14,847 பத்திரங்கள் பதிவு

சென்னை: ஆவணி மாதம் துவங்கி, முதல் வேலை நாளான நேற்று, தமிழகம் முழுவதும், 14 ஆயிரத்து, 847 பத்திரங்கள் பதிவானதாக, பதிவுத்துறை தெரிவித்து உள்ளது. ஆடி மாதம் என்பதால், தமிழகத்தில் சில வாரங்களாக பத்திரப்பதிவு எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது. ஆக., 17 ஆவணி துவங்கியது. ஆனால், அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பத்திரங்கள் பதிவாகவில்லை.இதன் பின், சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின், முதல் வேலை நாள் துவங்கிய நேற்று, ஏராளமானோர் பதிவுக்கு வந்தனர். இதனால், […]

செய்திகள்

கேரள மாணவர்கள் உருவாக்கிய ‘எமர்ஜென்சி பவர் பேங்க்’

திருவனந்தபுரம்: இன்ஜினியரிங் மாணவர்கள் உருவாக்கிய, ‘எமர்ஜென்சி பவர் பேங்க்’ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. கேரள மக்களுக்கு தற்போதைய உடனடி தேவையாக, தகவல் தொடர்பு வசதி தான். ஆனால், வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்களின் மொபைல் போன்கள், ‘சார்ஜ்’ இல்லாமல் செயல் இழந்து விட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் கேரள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள், ‘இன்ஸ்பையர்’ என்ற பெயரில் ஒரு […]

செய்திகள்

காரியாபட்டி சி.இ.ஓ.ஏ. கலை அறிவியல் கல்லூரியில் இளையோர் பாராளுமன்றம்

காரியாபட்டி,ஆக.20– இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், விருதுநகர் மாவட்ட நேரு யுவ கேந்திரா, தமிழ்நாடு காவல்துறை மனித வர்த்தகம் மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு, சி.இ.ஓ.ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து ஒன்றிய அளவிலான இளையோர் பாராளுமன்றம் மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு, குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. காரியாபட்டி அருகே உள்ள சி.இ.ஓ.ஏ கலை மற்றும் அறிவியல் […]

செய்திகள்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ‘மலரும் நினைவு’

கோவை, ஆக. 20– கோவை, துடியலூர் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் 1996 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டுவரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வர் பி.எல்.சிவகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் ரிஷி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் உட்பட 32 பேர் 22 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து தங்கள் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர். விழாவில், முன்னாள் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் […]

செய்திகள்

திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளியில் வணிகவியல் தொடர்பான போட்டி

திருப்பூர், ஆக. 20– திருப்பூர் ப்ரண்ட்லைன் மிலேனியம் மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி மற்றும் நிகழ்ச்சியின் நடுவர்களாக சரவணன், ஸ்ரீனிவாசன், சித்ரா, ஜோதிராமலிங்கம், சியாமளா தேவி, பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வரைப்பட விளக்கம், வினாடி, வினா, குழு கலந்துரையாடல், ஆடை அணிவகுப்பு, விளம்பரம், நேர்காணல், பண்முக […]

செய்திகள்

ருதம்பர யோகா மையம் சார்பில் ‘தொப்பைக்கு குட்பை’ நிகழ்ச்சி

கோவை, ஆக. 20– கோவை ருதம்பர யோகா அறக்கட்டளை சார்பில், ‘தொப்பைக்கு குட்பை’ என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை ருதம்பர யோகா அறக்கட்டளையின் 7ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பீளமேடு -ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள கோ இந்தியா காம்ப்ளக்ஸில் ‘தொப்பைக்கு குட்பை’ என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. ருதம்பர அறக்கட்டளையின் தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் சித்தர் ஸ்ரீ பதஞ்சலி ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் பதினெண்சித்தர்கள் […]

செய்திகள்

ஓசூர் ஸ்டேன்போர்டு பள்ளியில் கலை விழா

ஓசூர், ஆக. 20– கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கசவுகட்டா பகுதியில் உள்ள ஸ்டேன்போர்டு பள்ளியில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவர் சுசீலா எம்ஜிஆர் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் எம்ஜிஆர் அனைவரையும் வரவேற்று பேசினார். அட்கோ இன்ஸ்பெக்டர் பெரியசாமி, ஆடிட்டர் மணி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், தேசிய ஒருமைப்பாடு சம்பந்தமான நாட்டிய நிகழ்ச்சி, பரதநாட்டியம், குச்சுப்புடி என பல வகை […]

செய்திகள்

வைகை அணை திறப்பு : 7 மதகுகளில் வைகை ஆற்றில் தண்ணீர் வெளியேற்றம்

தேனி,ஆக.20– தேனி மாவட்டம், வைகை அணை நீர்மட்டம் 69 அடியானதை தொடர்ந்து 3–ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, நேற்று மதியம் அணை திறக்கப்பட்டு ஏழு மதகுகள் வழியாக வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மாவட்டத்தில் பெய்த மழை மற்றும் பெரியாறு அணை நீர் வரத்தால், வைகை அணை நீர்மட்டம் கடந்த சில நாட்களில் வேகமாக உயர்ந்தது. நேற்று முன்தினம் நீர்மட்டம் 66 அடியானதை தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டடது. நேற்று […]