செய்திகள்

முகையூர் ஒன்றிய வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு

விழுப்புரம்,ஜன.4- விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம் டி.அத்திப்பாக்கம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் 2018–19-ன் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில், புதியதாக அமைக்கப்பட்ட இரண்டு பண்ணை குட்டைகளை கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, வீரபாண்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய […]

செய்திகள்

திருவாரூர் இடைத்தேர்தலில் இதுவரை 52 விருப்ப மனுக்கள்: அண்ணா தி.மு.க. அறிவிப்பு

சென்னை, ஜன.4– திருவாரூர் இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட இதுவரை 52 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுகுறித்து, அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் 28–ந்தேதி நடைபெறுகிறது. அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள் தங்களுடைய விருப்ப மனுக்களை கடந்த 2 மற்றும் 3–ந்தேதிகளில் தலைமை கழகத்தில் வழங்கலாம் என்று அறிவிப்பு […]

செய்திகள்

ஆவடி, திருவேற்காட்டில் 550 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா

திருவள்ளூர், ஜன. 4– ஆவடி, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த 550 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் பாண்டியராஜன், கலெக்டர் மகேஸ்வரி ஆகியோர் வழங்கினர். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், தண்டுரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு நிலவரித் திட்டத்தின் கீழ் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சியில் 550 பயனாளிகளுக்கு ரூ.273.35 கோடி மதிப்பில் 40.23 ஏக்கர் பரப்பிலான நிலத்திற்கு பட்டாக்களையும், தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் மறு கட்டுமான பணி கோட்டம் சார்பாக ஆவடி, […]

செய்திகள்

புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் டெல்லியில் இன்று போராட்டம்

புது டெல்லி, ஜன. 4 – புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இன்று காலையில் டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். டெல்லி பாராளுமன்றம் எதிரே உள்ள ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இந்த போராட்டம் நிடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சஞ்சய்தத் , கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் து.ராஜா , நாராயணா, மார்க்சிஸ்ட் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக மகளிர் அணி செயலாளர் கணிமொழி எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட […]

செய்திகள்

5 மாநிலங்களில் ஆல் இந்தியா ரேடியோவை மூட மத்திய அரசு முடிவு

புதுடெல்லி, ஜன. 4 கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆல் இந்தியா ரேடியோ அலுவலகங்களை மூடி, ஒலிபரப்பை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சிக்கன நடவடிக்கையாக மேகாலயாவின் ஷில்லாங், குஜராத்தின் ஆமதாபாத், கேரளாவின் திருவனந்தபுரம், உத்தர பிரதேசத்தின் லக்னோ மற்றும் தெலுங்கானாவின் ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள ஆல் இந்தியா ரேடியோவை மூட உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

செய்திகள்

ஒரகடம் அருகே கடத்தப்பட்ட 5 வயது சிறுவன்: அம்பத்தூர் அருகே மீட்பு

காஞ்சீபுரம்,ஜன.4— ஒரகடம் அருகே கடத்தப்பட்ட 5 வயது சிறுவன் சென்னை அம்பத்தூர் அருகே உயிருடன் மீட்கப்பட்டான். காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே சேந்தமங்கலம் பகுதியில் வசிப்பவர் குமரபிரசாத் (36). இவர் தனது 5 வயது குழந்தை குமர குருவுடன் ஒரகடத்திற்கு வந்தார். அங்குள்ள அரசு மதுபான கடைக்கு சென்று மது வாங்கி சாலையிலேயே குடித்தார். போதை அவருக்கு தலை கேறியதால், ரோடு ஓரத்திலேயே மகனுடன் படுத்துள்ளார். போதை தெளிந்து பார்த்த போது, மகன் குமரகுரு காணாமல் போனதை […]

செய்திகள்

மேகதாது அணைக்கு எதிரான தமிழக மனுவை விசாரிக்க கூடாது

டெல்லி, ஜன. 4– மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் மனுவை விசாரிக்கக்கூடாது என கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணிகளில் கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கான வரைவறிக்கை தயாரிக்கப்பட்டு, அம்மாநில அமைச்சரவையில் ஒப்புதலும் பெறப்பட்டது. இதனையடுத்து மேகதாது அணை தொடர்பாக செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய […]

செய்திகள்

அரசியல் காரணங்களுக்காக விவசாயிகளை திசை திருப்புவதா?

சென்னை, ஜன. 4– மின் கோபுரங்கள் அமைக்கும் விஷயத்தில் விவசாயிகளை திசை திருப்பி, போராட்டத்தை தூண்டிவிடுவது ஏன்? என்று சட்டசபையில் எதிர்க்கட்சிகளை நோக்கி அமைச்சர் பி.தங்கமணி கேள்வி எழுப்பினர். சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது பேசினார். அப்போது கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக உயரழுத்த மின் கம்பங்கள் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் போராடி வருவதாகவும், உயரழுத்த மின் கம்பங்களுக்கு பதிலாக புதைவட மின் வழித்தடங்களை […]

செய்திகள்

செய்யூர் தீவாடி விநாயகர் கோவிலை புனரமைக்க அரசு நடவடிக்கை

சென்னை, ஜன. 4– செய்யூர் தீவாடி விநாயகர் கோவிலை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சட்டசபையில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது செய்யூர் தொகுதி உறுப்பினர் டாக்டர் ஆர்டி அரசு கேள்வி ஒன்றை எழுப்பினார். செய்யூர் தொகுதிக்குட்பட்ட தீவாடியில் உள்ள விநாயகர் கோவிலை புனரமைக்க அரசு முன்வருமா? என்று கேட்டார். அதற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பதில் அளித்து கூறும்போது, காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தொகுதிகுட்பட்ட தீவாடி […]

செய்திகள்

முதல்வர் கோப்பைக்கான கபாடி போட்டி இந்த ஆண்டு நடத்தப்படும்

சென்னை, ஜன. 4 இந்த ஆண்டு முதல்வர் கோப்பைக்கான கபாடி போட்டி நடத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார். சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் தமிழ்செல்வன் கேள்வி ஒன்றை எழுப்பினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்க அரசு ஆவன செய்யுமா? என்றார். அதற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பதில் அளித்து கூறியதாவது:– பெரம்பலூரில் உள்ள […]