செய்திகள்

தமிழகத்தில் நாய்க்கடியால் ஏற்படும் இறப்பு இல்லாத நிலை உருவாக்கம்

நாய்க்கடியால் ஏற்படும் இறப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்று சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது ஆலங்குளம் தொகுதி உறுப்பினர் பூங்கோதை அலடி அருணா கேள்வி ஒன்றை எழுப்பினார். ஆலங்குளம் பேரூராட்சியில் உள்ள அரசு வட்ட மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் வசதி செய்து தர அரசு முன்வருமா? என்றார். அதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கூறியதாவது:– ஆலங்குளத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 60 படுக்கை வசதிகளுடன் […]

செய்திகள்

மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவே 5, 8–ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்தோம்

சென்னை, மார்ச் 12– மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் தான் 5–ம் வகுப்பு, 8–ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்தோம் என்றும், நீங்கள் தான் அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டீர்கள் என்றும் சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் பொன்முடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார். சட்டசபையில் இன்று பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தி.மு.க. உறுப்பினர் பொன்முடி பேசினார். அப்போது மாநில கல்வி உரிமை, மற்றும் 5–ம் வகுப்பு, 8–ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு […]

செய்திகள்

17 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தது இந்திய ரூபாய்

மும்பை, மார்ச் 12 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சந்தை தொடக்கத்தில் கிட்டதட்ட ஒரு சதவீதம் வீழ்ச்சி கண்டு 74.34 ரூபாயாக உள்ளது. ஆசிய நாணயங்களில் ரூபாய் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் நாளுக்கு நாள் பரவி வரும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்னும் இதன் தாக்கம் அதிகரிக்கலாம் என்ற பயம் மக்கள் மனதில் நிலவி வருகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியிலும் ஒரு பயத்தினை உருவாக்கியுள்ளது […]

செய்திகள்

நகர்ப்புற, தொழிற்சாலை பகுதிகளில் சுற்றுப்புற காற்றின் தரம்: 24 நிலையங்களில் தொடர் கண்காணிப்பு

சென்னை, மார்ச் 12– அரசின் முயற்சியின் காரணமாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதத்துடன் பேசினார். தமிழக சட்டசபையில் சுற்றுச்சூழல்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:- இந்திய திருநாடே திரும்பி பார்க்கிற வகையில் நமது முதல்வர் பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக உருவாக்க ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகையிலான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் 1.1.2019 முதல் தடையாணை பிறப்பிக்கப்பட்டது. […]

செய்திகள்

கோவையில் மனித – யானை மோதல்களை தடுக்க ரூ.7¼ கோடியில் முன்னெச்சரிக்கை அமைப்பு

சென்னை, மார்ச் 12– கோவையில் மனித–யானை மோதல்களை தடுக்க ரூ.7.24 கோடியில் முன்னெச்சரிக்கை அமைக்கப்பட்டுள்ளது என்று சட்டசபையில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்துள்ளார். சட்டசபையில் வனத்துறை மீதான மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:–- அரசு தேயிலைத் தோட்டக்கழகம் தமிழ்நாடு வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்து 4053.758 ஹெக்டேர் நிலப்பரப்பில் தேயிலைத் தோட்டங்களைக் கொண்டுள்ளது 2019–20ம் ஆண்டில் 239.65 லட்சம் கிலோ கிராம் பசுந்தேயிலை மற்றும் 58.28 லட்சம் கிலோ கிராம் […]

செய்திகள்

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரெயில் பாதை பணி தாமதம் ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

சென்னை, மார்ச் 12- வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரெயில் பாதை பணி தாமதம் ஏன்? என்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய தி.மு.க. உறுப்பினர் தா.மோ.அன்பரசன், “ஆலந்தூர் தொகுதியில் உள்ள ஆழப்பாக்கம் ஏரியை சீரமைப்பதற்காக ரூ.3.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. உடனே பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், வேளச்சேரி – […]

செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகருக்கு கொரோனா

சென்னை, மார்ச் 12 பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹங்ஸ் தனக்கு கொரோனா இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது மனைவி ரீட்டாவும் நானும் பட தயாரிப்பு பணிகளுக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தோம். அங்கு சென்றதும் எனக்கு லேசான உடல் சோர்வு, சளி தொல்லை இருந்தது. அதேபோல் எனது மனைவிக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து நாங்கள் இருவரும் மருத்துவ பரிசோதனை செய்ததில் எங்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது மருத்துவர்களின் தீவிர […]

செய்திகள்

தமிழக பாரதீய ஜனதா தலைவராக எல்.முருகன் நியமனம்

புதுடெல்லி, மார்ச்.12- தமிழக பாரதீய ஜனதா தலைவராக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவராக உள்ள எல்.முருகன் நியமிக்கப்படுவதாக ஜே.பி. நட்டா அறிவித்து உள்ளார். தமிழக பா.ஜனதா தலைவராக இருந்து வந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கடந்த ஆண்டு தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தமிழக பாரதீய ஜனதா தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.தலைவர் பதவிக்கு பலரின் பெயர்கள் அடிபட்ட நிலையில், எல்.முருகன் என்பவரை தமிழக பாரதீய ஜனதா தலைவராக, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்தார். இதற்கான […]

செய்திகள்

பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க தேவையில்லை

புதுடெல்லி, மார்ச்.12- பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க தேவையில்லை என அறிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் 44 கோடியே 51 லட்சம் சேமிப்பு கணக்குகள் உள்ளன. மெட்ரோ நகரங்களில் ரூ.3 ஆயிரமும், இதர நகரங்களில் ரூ.2 ஆயிரமும், ஊரக பகுதிகளில் ஆயிரம் ரூபாயும் இந்த கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டி இருந்தது. அப்படி வைத்திருக்காவிட்டால், ரூ.5 முதல் ரூ.15 வரை (வரிகள் தனி) அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், எல்லா […]