செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலால் உருக்குலையும் காசா

காசா, அக். 11–

இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவிற்கு அருகில் உள்ள கடலோர பகுதி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது.

இஸ்ரேல் போர் விமானங்கள் கடந்த 24 மணிநேரத்தில் காசாவிற்கு அருகில் உள்ள அல்-பர்ஹான் பகுதியில் பல இலக்குகளைத் தாக்கியுள்ளது என அதிகாரபூர்வமாக இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்கிறது. மேலும், இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதியில் ஹமாஸ் எதிர்த் தாக்குதல் நடத்தி வந்தது. சிரியா மற்றும் லெபனான் பகுதிகளில் இருந்தும் பாலஸ்தீன் இராணுவம் தாக்குதல் நடத்தியது.

மக்கள் இடப்பெயர்வு

காசா பகுதியில் இருந்து மக்கள் தங்களுக்கான பாதுகாப்பைத் தேடி, அதன் அண்டை பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். பலர், ஐ.நா.வால் நிர்வாகிக்கப்படும் பள்ளிகளில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். காசா மக்களின் நிலைமை மேலும் மோசமாகி வருவதைக் கண்ட மனிதநேய ஆர்வலர்கள் அவர்களுக்கு உதவிகளை ஏற்படுத்தி தரக் குரல் கொடுத்து வருகின்றனர்.

உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பொருள்கள் எதுவும் உள்ளே செல்ல இயலாதவாறு இஸ்ரேல் முழுமையாக காசாவை முற்றுகை செய்துள்ளது. ஏற்கெனவே இருந்த ஒரே வழியான எகிப்தும் நேற்று முதல் அடைப்பட்டுவிட்டது. காசாவின் மருத்துவமனைகளில் போதிய மருந்து பொருள்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை இரு தரப்பிலும் 2100-க்கும் அதிகமான உயிர்கள் பலியாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. காசா பகுதியை 2007 முதல் அதிகாரத்தில் வைத்திருக்கும் ஹமாஸ் குழுவை ஒடுக்கும் செயலில் இஸ்ரேல் மேலும் தீவிரம் காட்டி வருகிறது. இந்தச் சூழலால், காசாவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளதாக ஐ.நா. தெரிவிக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *