செய்திகள் நாடும் நடப்பும்

அணுவுக்கு அப்பால் மானுடம்


ஆர் முத்துக்குமார்


இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளியில் மிகக் குறுகிய கண நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்வது குறித்த ஆய்வுக்காக இந்த பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது. அவர்களது ஆய்வு தான் எலக்ட்ரான்கள் குறித்து புரிந்து கொள்வதற்கான கதவுகளை திறந்துள்ளது.

பியர்ரி அகோஸ்டினி, ஃபெரன்க் கிரௌஸ், ஆன்னி எல் ஹூய்லியர் ஆகிய 3 விஞ்ஞானிகள் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

அணுக்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை பதிவு செய்யவும் புரிந்து கொள்ளவும் உதவக் கூடிய மிகமிகக் குறுகிய அதிர்வு கொண்ட ஒளியை உருவாக்குவது எப்படி என்பதே அவர்களது ஆய்வு செய்து காட்டியது.

மூவருக்கும் கூட்டாக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதன் ரொக்கப் பரிசாக 8.26 கோடி ரூபாய் கிடைக்கும்.

ஒரு அணுவின் மையப்பகுதி அதன் உட்கரு ஆகும். அதில் புரோட்டான் எனப்படும் நேர்மின் துகளும் நியூட்ரான் எனப்படும் நடுநிலைத் துகளும் இன்ன பிற துணைத்துகள்களும் இருக்கும். அணுக்கருவை சுற்றி எலக்ட்ரான்கள் எனப்படும் எதிர்மின் துகள்கள் அணுக்கருவை தத்தம் ஆற்றல் மட்டக் கூடுகளில் எப்படி கோள்கள் கதிரவனை சுற்றி வருகிறதோ அப்படி சுற்றி வரும்.

ஆனால் அவை கோள்களைப் போல நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சுற்றி வருவதில்லை. மாறாக இங்கும் அங்குமாய் தத்தித் தாவும். இவ்வாறு அது நகரும் புள்ளிகளின் நிகழ்தகவே அதன் ஆற்றல் கூடாக கொள்ளப்படுகிறது.

ஒரு நிலையான அணுவில் நேர்மின் துகள்களும் எதிர் மின் துகள்களின் எண்ணிக்கையும் சம அளவில் இருக்கும். எதிர் மின் துகள்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆற்றல்மட்ட கூடுகளின் எண்ணிக்கையும் கூடும். ஒளியை பற்றி மேலும் தெரிந்து கொள்வதால் என்ன பயன்? நம்மை பற்றி தெரிந்து கொள்ள இது உதவும்!

உயிர் என்று நான் குறிப்பிடுவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயல்களை செய்ய உருவாக்கப்பட்ட அணுக்கூட்டங்கள் தான் அல்லவா?

ரத்தமும் சதையுமாக இருக்கும் அணுக்கூட்டங்களைத்தான் நாம் உயிர் உள்ளவை என குறிப்பிடுகின்றோம்.

அதைத் தவிர வேறு எந்த பொருளையும் நாம் உயிர் உள்ளவை என நினைக்க மாட்டோம். உயிர் என்று நான் குறிப்பிடுவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயல்களைச் செய்ய உருவாக்கப்பட்ட அணுக்கூட்டங்கள் தான் .

ஆம்,ஒருவர் இறந்துவிட்டார் என்று நாம் கூறும் அந்த நிலையில் கூட அந்த உடம்பில் ஏதோ ஒரு செல் உயிருடன் தான் இருக்கும், அதாவது வேலை செய்து கொண்டுதான் இருக்கும்! அந்த செல்லுக்கான உணவு என்று கிடைக்காமல் போகிறதோ அன்று அது தன் வேலையை நிறுத்தும்…

மேலும் தற்போதைய விஞ்ஞானம் சொல்லித் தருவது எதிர்மின்னிகள், நேர்மின்னிகள், நொதுமிகள் மற்றும் பிற துணை அணுத் துகள்களால் உருவான அணுவை மிகச்சிறிய துகள் என்று யாரும் கூறுவதில்லை.

அதை 12 வித அடிப்படைத் துகள்களால் ஆனது என்றே ஆய்வாளர் சொல்வர்.

மிகச்சிறிய என்றால் இங்கு அதைவிடச் சிறியது இல்லை என்ற பொருளில் கூறப்படவில்லை . வேறொன்று காணாத வரை இது சிறியது.

இப்போது புரிகிறதா இந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு ஏன் அவசியம் என்று?

நாம் தொலைதூர அண்டசராசர ரகசியங்களை கண்ணில் பார்க்கவோ, தொலைநோக்கிகள் கொண்டு ஆராயவோ முடியும். ஆனால் கண்ணுக்கு தெரியாத பலவற்றை பற்றி எப்படித் தெரிந்து கொள்வது?

அணுவைப் பிளந்து அதன் உள் இருக்கும் கூறுகளை பார்க்க ஆரம்பித்து விட்டோம்.

ஆனால் அந்தச் சிறு துகள்களை இயக்கும் சக்தியின் பின்னணியில் இருப்பவை பற்றிய தெளிவு பெற இனி அவர்கள் கண்டுபிடிப்பு உதவும்.

வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை அவற்றின் அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு எதிர்செயலாற்ற நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தயார்படுத்தும் வேலையைத் தடுப்பூசிகள் செய்கின்றன.

கோவிட் தொற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வழிவகுத்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரண்டு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் கேத்தலின் கரிகோ மற்றும் டாக்டர் ட்ரூ வேஸ்மேன் ஆகியோர் இதைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

இந்தத் தொழில்நுட்பம் பெருந்தொற்றுப் பேரிடருக்கு முன்பு சோதனை கட்டத்திலேயே இருந்தது. ஆனால் தற்போது அது உலகம் முழுக்கப் பல கோடி உயிர்களைக் காப்பாற்றி வருகிறது.

கண நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்யும் தொழில்நுட்பமும் வரும் கால பல்வேறு சவால்களுக்கு தீர்வை சில மணி நேரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கே கொண்டு வந்து விட முடியும்!

அதாவது தொற்றுபரவி பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் முன் தடுப்பூசி மருந்தை உருவாக்கி விட முடியும்!

அணுவிற்கும் பிரபஞ்சத்திற்கும் இடையே கட்டமைப்பு ஒற்றுமை இல்லை. அணுக்கள் பொதுவாக ஒரு குவாண்டம் அமைப்பின் பிணைப்பு நிலைகளாக விவரிக்கப்படுகின்றன, அதே சமயம் பிரபஞ்சம் பொதுவாக பொதுவான சார்பியல் மூலம் விவரிக்கப்படுகிறது, இரண்டு வேறுபட்ட மற்றும் தற்போது இணக்கமற்ற அணுகுமுறைகள்.

ஹைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் மற்றும் நைட்ரஜன் ஆகியவை பிரபஞ்சத்தில் மிகவும் பொதுவான நான்கு வேதியியல் செயலில் உள்ள கூறுகள் – பூமியில் வாழ்வின் நான்கு பொதுவான கூறுகள்.

மேலும் அவை மனித உயிரியலின் அடிப்படையும் கூட!

ஆக இயற்பியலுக்கான நோபல் பரிசும் மருத்துவத்திற்கான நோபல் பரிசும் பெற்றுள்ள விஞ்ஞானம் புதிய எதிர்கால வாழ்வியல் சமாச்சாரங்களை பற்றி நமக்கு ஓர் சிறு அரிய முன்னுரை என்றே கூற வேண்டும் , அது முற்றுரையின்றி மானுடம் தொடரும் என்றும் உணர வைக்கிறது!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *