செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது

சென்னை, டிச.11–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து பவுன் ரூ.46,000-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த 5 மற்றும் 6 ஆகிய 2 நாள்களில் பவுனுக்கு ரூ.1,240 வரை குறைந்த நிலையில் சென்னையில் கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.46,120-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,750-க்கும்,பவுனுக்கு ரூ.120 குறைந்து 46 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 20 பைசா குறைந்து கிராம் ரூ.77.80-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.200 குறைந்து ரூ.77,800-க்கும் விற்பனையாகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *