சென்னை, டிச. 17– சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதிகளை கமல்ஹாசன் பார்வையிட்டார். சென்னையில் மிச்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எண்ணூர் பகுதியில் பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எண்ணெய் கழிவுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியது. பின்னர் எண்ணூர் முகத்துவார பகுதியில் போய் கடலில் கலந்தது. இந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந் தேதியில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 75 படகுகளில் சென்று […]