செய்திகள்

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: உடனடி முன்பதிவை நிறுத்த ஆலோசனை

திருவனந்தபுரம், டிச. 13–

சபரிமலையில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் குவிந்து வருவதால் உடனடி முன்பதிவை நிறுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில தினங்களாக 90 ஆயிரத்துக்கு மேலான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கேரள உயர் நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு தரிசன நேரம் ஒரு மணிநேரம் அதிகரிக்கப்பட்டது. மேலும் தினசரி தரிசன முன்பதிவு எண்ணிக்கை 90 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்த நடவடிக்கைகளால் எந்த பலனும் ஏற்படவில்லை. இன்றும் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து சபரிமலை தந்திரி கண்டரரரு ராஜீவரு கூறுகையில், சபரிமலையில் தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக ஆன்லைன் புக்கிங் மூலம் 90,000 பேரும், நேரடி புக்கிங் மூலம் 30,000 பேரும் தரிசனத்திற்கு வருகின்றனர்.

75 ஆயிரமாக குறைக்க ஆலோசனை

இந்த முறை குழந்தைகள், பெண்கள், வயதானர்கள் அதிக அளவில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளதால் கூட்ட நெரிசலில் 18 ம் படி ஏறுவதற்கு அதிக சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் 18ம் படி ஏறுவதற்காக காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தினசரி சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை 75,000 ஆக குறைக்க வேண்டும் என போலீசார், தேவசம் போர்டுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் உடனடி முன்பதிவு செய்து லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக் வருகின்றனர்.

இதன் காரணமாகவே பக்தர்கள் கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காத வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சாமி தரிசனத்துக்கான உடனடி முன்பதிவை நிறுத்த வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது இவ்வாறு கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *