செய்திகள் நாடும் நடப்பும்

வளைகுடா நாடுகளில் பயணம் ; அமெரிக்க கச்சா எண்ணெய் ஆதிக்கத்தை நொறுக்கிய புதின்


ஆர். முத்துக்குமார்


கடந்த வாரம் டிசம்பர் 6 ந் தேதி ஒரு நாள் அரசு முறை பயணமாக ரஷ்ய ஜனாதிபதி புதின் வளைகுடா நாடுகளின் முக்கிய நகரங்களான அபுதாபிக்கும், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்துக்கும் சென்று அந்நாட்டு தலைவர்களுடன் மனம் திறந்து பேசி விட்டு ஈரான் வான்பகுதி வழியாக மாஸ்கோ திரும்பினார்.

மறுநாள் ஈரான் அதிபர் ரயிசி மாஸ்கோவில் புதினை சந்தித்து பேசியும் உள்ளார்.

உக்ரைனில் போர் பதட்டம் துவங்கிய சில வாரங்களில் அமெரிக்காவின் கட்டளையின் பேரில் நாட்டோ நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தி உலக வர்த்தகத்தில் இருந்து ரஷ்யாவை வெளியேற்றியும் விட்டது.

மேலும் ரஷ்ய ஜனாதிபதி புதினை குற்றவாளி என உலக நீதிமன்றம் தீர்ப்பு தர அமெரிக்கா நட்பு நாடுகளுக்கு சென்றால் கைது செய்யப்படுவார் என்ற நிலையும் உருவானது.

இத்தகைய சூழ்நிலையில் வளைகுடா நாடுகளுக்கு புதின் நேரில் இரு நாட்டு தலைவர்களுடன் நேரடியாக சந்திப்புகள் நடத்தி இருப்பது ஆச்சர்யமானது.

ஐக்கிய அரபு நாடுகளின் அரசர் சிவப்பு கம்பள வரவேற்புடன் படு விமர்சையான வரவேற்பை தந்துள்ளார்.

புதினுடன் பேசி முடித்த பிறகு ஊடங்களுக்கு தந்த பேட்டியில் இரு நாடுகளிடையே வளரும் நல்லுறவுகளுக்கு நல்ல அடித்தளம் அமைத்திருப்பதாக புதினின் வருகையை பற்றிக் கூறியுள்ளார்.

சவுதி அரேபிய அரசரிடம் புதினே நம் இருநாட்டு உறவுகளையும் வளர்ச்சிகளையும் யாராலும் தடுக்கவே முடியாது என உறுதிபட கூறியுள்ளார்.

அமெரிக்க கெடுபிடி அரசியல் காரணமாக எண்ணெய் விலைகளை நிர்ணயிக்கும் ஓபெக் (OPEC) என்ற பெட்ரோலிய எண்ணை வள நாடுகளின் கூட்டமைப்பு ரஷ்யாவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.

ரஷ்ய ஜனாதிபதி புதினும் ஓபெக் நல்ல முடிவுகளை எடுக்கும்போது அதை வரவேற்று முழு மனதோடு ஆதரிப்பதாகவும் அதன் வழியில் தாங்களும் கச்சா எண்ணெய் தயாரிப்பு அளவுகளை குறைத்துக் கொள்ளத் தயார் என்று உறுதி தந்துள்ளார்.

அமெரிக்கா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்த பெட்ரோல் விலைகளை குறைக்க எண்ணெய் தயாரிப்பு நாடுகளை ஓபெக் கூட்டமைப்பு வழியாக கட்டுப்படுத்திட முற்பட்டது.

அதனால் சர்வதேக அளவில் ஏற்பட இருக்கும் பொருளாதார சீரழிவு சாமானியனுக்கு மிகப்பெரிய சவாலாக மாறும். அதை ஐக்கிய அரசு நாடுகளும் சவுதியும் விரும்பாது ஓபெக்கை அமெரிக்க கெடுபிடிக்கு செவி சாய்க்காமல் தடுத்து வரும் நிலையில் புதின் தனது ஆபத்துகளை பற்றி கவலைப்படாது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இது ஓபெக் கூட்டமைப்புக்கு புதிய சக்தியை தருவதைப் பார்க்க முடிகிறது. அமெரிக்காவுக்கு அச்சத்தை தரும் வகையில் கச்சா எண்ணெய் விலைகள் குறையும் வாய்ப்புகள் இருக்கிறது.

அமெரிக்காவுக்கு இது என்ன சவால்? அவர்கள் நாட்டு எண்ணெயின் விலை சர்வதேச சந்தை விலையோடு ஒன்றி இருப்பதால் விலைகளின் வீழ்ச்சி அவர்களுக்கு அச்சத்தை தரத்தான் செய்யும்.

ரஷ்யாவிடம் இனி அமெரிக்க பணத்தில் தான் வாங்க வேண்டிய கட்டாயம் இனி கிடையாது என்பதையும் புதினின் வளைகுடா விஜயம் உறுதி தருகிறது.

ஈரான் நாடும் அமெரிக்காவின் பொருளாதார முற்றுகையை சந்தித்து வருகிறது.

ஆக ஈரான் – ரஷ்ய அதிபர்களின் சந்திப்பு அமெரிக்காவின் சர்வாதிகார போக்கிற்கு சவாலாகவே இருக்கிறது.

இவர்களின் சந்திப்பின் போது காசா பகுதியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தினால் அரங்கேறி வரும் ரத்தவெறி தாக்குதல்கள் பற்றியும் மரண போராட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளுடன் நிவாரணத் தொகையைத் தர முன் வந்திருப்பதாக புதின் அறிவித்தார்.

ஆக புதின் வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்தது அமெரிக்காவின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து நிற்கும் வலிமையைக் காட்டத்தான் என்பது தெள்ளத்தளிவாகப் புரிகிறது.

அமெரிக்காவின் F35 ரக போர் விமானங்கள் மிக சக்தி வாய்ந்தது, பிரபலமானதும் என்பதை அறிவோம்.

ஆனால் யுத்த பதட்ட வான்வெளிப் பகுதியில் தனக்கு பாதுகாப்புக்கு நான்கு சுகாய் ரக நவீன போர் விமானங்கள் புடைசூழ பாதுகாப்பு வளையம் அமைத்திட புதின் பயணித்தார்.

அமெரிக்க போர் விமான சக்தியைக் கடந்து எங்கள் வலிமை பாரீர் எனப் பறை சாற்றுகிறது புதினின் இந்த ஒரு நாள் சுற்றுப்பயணம்.

அமெரிக்க கச்சா எண்ணெய் ஆதிக்கத்தை நொறுக்கிய புதினின் இந்த வெற்றிப் பயணத்தை வளரும் உலக நாடுகள்

வரவேற்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *