செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,320 கனஅடியாக உயர்வு

மேட்டூர், நவ. 15– மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,320 கனஅடியாக உயர்ந்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டமும் இன்று காலை 8 மணி நிலவரப்படி 60.41 அடியாக உயர்ந்துள்ளது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,297 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,320 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. நீர்மட்டம் உயர்வு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் […]

Loading

செய்திகள்

திருப்பூர் நெடுஞ்சாலையில் பைக் சாகசம்: வாலிபர் கைது

திருப்பூர், நவ. 15– திருப்பூரில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் கோவை -– சேலம் பைபாஸ் ரோட்டில் தினமும் வாலிபர் ஒருவர் அதிவேகமாக செல்லக்கூடிய பைக் ஒன்றில், அபாயகரமாக ஓட்டி சென்று சாகசம் செய்வதாகவும் இதனால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல்கள் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் அந்த வாலிபரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் […]

Loading

செய்திகள்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Loading

செய்திகள்

பைக்கில் பட்டாசு வெடித்து சாகசம்: கைது செய்யப்பட்ட 5 பேரின் லைசென்ஸை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை

திருச்சி, நவ. 14– திருச்சியில் பைக்கில் பட்டாசு வெடித்து சாகசம் செய்ததால் கைதான 5 பேரின் லைசென்ஸ்களை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு, இளைஞர் ஒருவர் தொடர்ச்சியாக கீழே இருந்து மேலே சென்று வெடிக்கும் பேன்சி ரக பட்டாசை பைக்கின் முன்புறம் பொருத்தி அதனை கொளுத்தி வெடிக்க செய்து கொண்டு பைக்கை நெடுஞ்சாலையில் ஓட்டியதும், வீலிங் செய்வது போன்ற ஒரு வீடியோ பதிவிடப்பட்டது. டெவில் ரைடர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த […]

Loading

செய்திகள்

புதிதாக நியமிக்கப்பட்ட பிரிட்டன்வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

புதுடெல்லி, நவ.14– புதிதாக நியமிக்கப்பட்ட பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூனை சந்தித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர். 4 நாள் அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலில் தீபாவளி கொண்டாடினார். அன்றைய தினம் அவர் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துப் பேசினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான உறவுகளைப் பற்றி விவாதிக்க எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தியா […]

Loading

செய்திகள்

தெலங்கானா தேர்தல்: சர்ச்சைக்குரிய விளம்பரங்களை நீக்க தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

டெல்லி, நவ. 14– தெலங்கானா தேர்தலில் அரசியல் சூடு அதிகரித்து வரும் நிலையில் விதிமுறைகளை மீறிய தேர்தல் விளம்பரங்களை நீக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் குழுவின் விதிமுறைகளை மீறியதால், அரசியல் கட்சிகள் தங்களின் சில விளம்பரங்களை நீக்குமாறு மாநிலத்தின் பிரதான கட்சிகளான பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவற்றுக்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றிதழ் குழுவின் விதிகளை […]

Loading

செய்திகள்

5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

இளைஞருக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கொச்சி, நவ. 14– கேரளாவில் 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அசாஃபக் அலம் என்ற இளைஞருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். கேரளாவின் கொச்சி மாவட்டம், அலுவா பகுதியில் உள்ள மொகத் பிளாசாவில் பீகாரைச் சேர்ந்த அசாபக் அலாம் (29) என்பவர் கடந்த ஜூலை மாதம் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், அருகில் வசித்த […]

Loading

செய்திகள்

இந்திய எல்லையில் அத்துமீறி பறந்த 82 பாகிஸ்தான் ட்ரோன்கள் பறிமுதல்

புதுடெல்லி, நவ. 14– இந்திய எல்லைப் பகுதிகளில் அத்து மீறி பறந்த 82 பாகிஸ்தான் ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்ந்பா இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது: கடந்த 2019 முதல் இதுவரை இந்திய எல்லைப் பகுதிகளில் அத்து மீறி பறந்த 82 பாகிஸ் தான்ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி பறிமுதல் செய்துள்ளோம். 593 முறைஎல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டது. கடந்த ஓராண்டில் மட்டும்ட்ரோன்கள் மூலம் இந்திய பகுதிகளுக்குள் வீசப்பட்ட 317 கிலோபோதைப் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ்

ஆர்.முத்துக்குமார் சமீபத்தில் ‘டைம்ஸ்’ இதழ் உலகின் தலைசிறந்த நிறுவனங்களை பட்டியலிட்டு உள்ளது. மைக்ரோசாப்ட், ஆப்பிள், ஆல்பபெட், மெட்டா ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. வருவாய், ஊழியர்களின் திருப்தி, சுற்றுச்சூழல், – சமூக – பொருளாதார தாக்கத்தின் அடிப்படையில் நிறுவனங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தொழில்நுட்ப நிறுவனங்களே முன்வரிசையில் உள்ளன. “உற்பத்தித் துறை நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கார்பன் உமிழ்வு மிகக் குறைவாக உள்ளது. இதனால் அவை பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன” என்று […]

Loading

செய்திகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு மாநிலங்களுக்கான வரிப்பகிர்வுத் தொகை ரூ.72,961 கோடி விடுவிப்பு

தமிழ்நாட்டுக்கு ரூ.2,976 கோடி புதுடெல்லி, நவ.8- மாநிலங்களுக்கான மாதாந்திர வரிப்பகிர்வு 10-ந் தேதியை கணக்கிட்டு விடுவிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை பண்டிகை காலத்தை முன்னிட்டு 3 நாட்கள் முன்னதாக வரிப்பகிர்வுத் தொகையை விடுவித்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி நவம்பர் மாதத்துக்கான வரிப்பகிர்வுத்தொகை ரூ.72,961.21 கோடியை, 10ந் தேதிக்கு பதிலாக 7ந் தேதி வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதில் தமிழ்நாட்டுக்கான பகிர்வுத்தொகை ரூ.2 ஆயிரத்து 976 கோடியே 10 லட்சம் ஆகும். […]

Loading