வாழ்வியல்

பூமியில் அதிகமாகக் காணப்படும் கார்போ ஹைட்ரேட்டுகள் எரிசக்தி – மரபணுத் தகவல்களைச் சேமித்து வைத்திருக்கும் அதிசயம்

ஆற்றல் சேமிப்பு , உயி்ர் கட்டமைப்பை வழங்குவது உள்ளிட்டவை கார்போஹைட்ரேட்டின் செயல்பாடுகளாகும்.

சர்க்கரைகளே கார்போஹைட்ரேட்டுகளாகும், ஆனால் அனைத்து கார்போஹைட்ரேட்டுகளும் சர்க்கரைகள் இல்லை.

வேறு எந்த வகையான உயிரி மூலக்கூறுகளைக் காட்டிலும் பூமியில் அதிகமாகக் காணப்படுவது கார்போ ஹைட்ரேட்டுகளே.

இவை எரிசக்தியையும் மரபணுத் தகவலையும் சேமித்து வைக்கின்றன.

மேலும் செல்களுக்கிடையில் பரிமாறப்படும் தகவல் தொடர்புகளுக்கும் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

கார்போஹைட்ரேட்டுகளில் எளிய வகையாகக் கருதப்படுவது ஒற்றைச் சர்க்கரை. கார்பன், ஐட்ரசன் மற்றும் ஆக்சிசன் ஆகிய தனிமங்களால் இவை ஆக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் 1: 2: 1 என்ற விகிதத்தில் CnH2nOn, என்ற பொது வாய்ப்பாட்டுடன் இவை உருவாகின்றன. இங்கு n குறைந்த பட்சம் 3 ஆக இருக்கும்.

குளுக்கோசு (C6H12O6) என்ற ஒற்றைச் சர்க்கரை மிக முக்கியமான கார்போஹைட்ரேட்டுகளில் ஒன்றாகும் . பிரக்டோசு (C6H12O6), டியாக்சிரிபோசு சர்க்கரை முதலியன பொதுவாக பழங்களின் இனிப்பு சுவையுடன் தொடர்புடையதாகும்.

ஓர் ஒற்றைச் சர்க்கரை திறந்த நிலை அமைப்பிலிருந்து அச்சர்க்கரையிலுள்ள கார்பனைல் குழு மற்றும் ஐதராக்சில் குழுவின் உட்கருகவர் கூட்டுவினைகளால் வளைய அமைப்பிற்கு மாறமுடியும். இவ்வினையில் கார்பன் அணுக்களால் ஆன வளையம் உருவாக்கப்பட்டு ஆக்சிசன் அணுவால் மூடப்படுகிறது. நேரியல் அமைப்பில் இடம்பெற்றுள்ள ஆல்டோசு அல்லது கீட்டோசைப் பொறுத்து எமியசிட்டால் அல்லது எமிகீட்டால் தொகுதி உருவாகிறது. இவ்வினை எளிமையாக மீள்வினையாக மாறி அசல் திறந்த சங்கிலி வடிவத்தை அடைகிறது. உயிரினங்களின் பகுதிகள் – அவற்றின் பகுதிக்கூறுகள் ஆகியவற்றை விளக்குவதாகவும் அவை எவ்வாறு ஒருங்கிணைந்து உயிர்வாழ்க்கைக்கு அவசியமாகிறது என்பதை விளக்குவதே உயிர்வேதியியல் துறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *