செய்திகள்

தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் பெற்று சாதனை

Spread the love

அருப்புக்கோட்டை, பிப்,13

தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அகில இந்திய சிலம்பம் பெடரேசன் சார்பில் கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைகழகத்தில் நடைபெற்ற 16 வது AISF தேசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் எஸ்.பி.கே.மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் ஆர்.எஸ்.ராம்நிஷாந்த் ஜூனியர் பிரிவில் மூவர் குழு ஆயுத வீச்சு, மூவர் குழு குத்து வரிசை, வேல் கம்பு வீச்சு போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதலிடம் பெற்று 3 தங்கப்பதக்கங்களும், சான்றிதழ்களும் பெற்றனர்.

மேலும் இதே பிரிவில் 11 ம் வகுப்பு மாணவர் I.கேசவன் தமிழ்நாடு சார்பில் மூவர் குழு ஆயுத வீச்சு, கம்புச்சண்டை, மூவர் குழு குத்து வரிசை போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதலிடம் பெற்று 3 தங்கப்பதக்கங்களும் சான்றிதழ்களும் பெற்று எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளிக்கும் விருதுநகர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று 3 தங்கப் பதக்கங்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சோ்த்த ஆர்.எஸ்.ராம்நிஷாந்த் மற்றும் I.கேசவன் ஆகிய இரு வீரர்களையும் சாதனைக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி துறையினரையும் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைத் தலைவர் சுதாகர், பள்ளிச்செயலர் காசிமுருகன், பள்ளித் தலைவர் ஜெயகணேசன், நிர்வாகக் குழுவினரும் பள்ளித் தலைமையாசிரியர் ஆனந்தராஜன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *