செய்திகள்

திருப்பதியில் மின் ஆற்றல் சேமிப்புக்கு புதிய திட்டம்

திருமலை, மார்ச் 9–

திருப்பதியில் மின் ஆற்றலை சேமிக்கும் திட்டத்தை செயல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாசலபதி திருக்கோயிலில் ஆந்திர மாநில ஆற்றல் சேமிப்பு மிஷன் (APSECM) முதல்கட்ட ஆய்வை மேற்கொண்டது. இதனை நீண்ட கால அடிப்படையில் செயல்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முன்வந்துள்ளது.

அதாவது தற்போதுள்ள சீலிங் பேன்கள், ஏசி உள்ளிட்டவற்றை மாற்றிவிட்டு, அதற்குப் பதிலாக 5 நட்சத்திர தரமுள்ள பொருள்களை பயன்படுத்தினால் ஆண்டிற்கு 8.68 மில்லியன் யூனிட் மின்சாரம் சேமிக்கலாம் என்ற விவரம் கிடைத்துள்ளது.

மின்சார சேமிப்பு

தற்போது விளக்குகள், சமையல் மற்றும் பிற தேவைகளுக்காக ஆண்டிற்கு 68 மில்லியன் யூனிட் மின்சாரத்தை திருப்பதி தேவஸ்தானம் செலவிடுகிறது. இதில் 36 சதவீதம் சூரிய ஒளி மூலமும், எஞ்சிய 64 சதவீதம் தெர்மல் மூலங்களின் வழியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக 40 கோடி ரூபாய் மின் கட்டணமாக செலுத்தப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஆற்றலை சேமித்து செலவைக் குறைக்கும் மாற்று முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருமலை மற்றும் திருப்பதியில் விரிவான மின் ஆற்றல் செலவீனம் குறித்து ஆந்திர மாநில ஆற்றல் சேமிப்பு மிசன் (APSECM) ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் முடிவுகள் வெளியான பிறகு ஆற்றல் சேமிப்பு திட்டங்களை அமல்படுத்த அதிகாரிகளுக்கு தேவஸ்தான செயல் தலைவர் கே.எஸ்.ஜவகர் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *