செய்திகள்

அமெரிக்காவில் மிக உயரமான 19 அடி அம்பேத்கர் சிலை திறப்பு

வாஷிங்டன், அக். 15–

இந்தியாவுக்கு வெளியே மிக உயரமான 19 அடி அம்பேத்கர் சிலை அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள், அம்பேத்கரின் சிலை திறப்பு விழாவில் கலந்துக் கொண்டனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 1891-ஆம் ஆண்டு பிறந்த பி.ஆா். அம்பேத்கா், இந்திய அரசியல் நிா்ணய சபையில் அரசமைப்பு வரைவுக் குழுத் தலைவராக இருந்து, அரசமைப்பை வடிவமைப்பத்தில் முக்கிய பங்காற்றினார்.

சமத்துவத்தின் சிலை

அம்பேத்கரின் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரில் 13 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட அம்பேக்தர் சர்வதேச மையத்தில் (ஏஐசி) ‘சமத்துவத்தின் சிலை’ என்று பெயரிடப்பட்ட 19 அடி முழுஉருவ அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அம்பேத்கர் புத்த மதத்தில் தன்னை இணைத்துக் கொண்ட நாளான அக்டோபர் 14-ஆம் தேதி இந்தச் சிலை திறக்கப்பட்டது. இந்தச் சிலையை பிரபல சிற்பி ராம் சுதார் வடிவமைத்துள்ளார். இவர் குஜராத் நர்மதா ஆற்றங்கரையில் நிறுவப்பட்டுள்ள ‘ஒற்றுமையின் சிலை’ என்றழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல் சிலையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *