செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 200 குறைவு

சென்னை, ஏப். 02–

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று, சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ. 51,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக, உச்சத்தை எட்டிய தங்கம் விலை, அவ்வப்போது சற்று சரிந்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.

ரூ. 200 குறைவு

இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இது நகைப் பிரியர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் ஆறுதலாக அமைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து ஒரு சவரன் ரூ. 51,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 25 சரிந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,430-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,015-க்கும், ஒரு சவரன் ரூ. 56,120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.82,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *