போஸ்டர் செய்தி

5 மொழிகளில் எஸ்.ஜே. ஜனனி இசையமைத்து சொந்தக் குரலில் பாடிய ‘அம்மா’ விசேஷ ஆல்பம்!

அன்னையர் தினத்தையொட்டி, ‘அம்மா’ மீதான பாடல் ஆல்பத்தை தன் இசையில் பாடி வெளியிட்டார் எஸ்.ஜெ. ஜனனி. இவர் இளம் பாடகி, ‘கலைமாணி’ விருது பெறும் இசையமைப்பாளர். தமிழில் மட்டுமல்ல – தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று 5 மொழிகளிலும் இந்த ஆல்பத்தை வெளியிட்டார் என்பது ஒரு தனிச்சிறப்பு.
பாடலாசிரியர் ரமேஷ் வைத்யா அழகான வரிகளை எழுதித் தந்திருக்கிறார். தெலுங்கில் பாரதி பாபு, கன்னடத்தில் சந்ரூ, இந்தியில் அரவிந்த் தேஷ் பாண்டி பாடல் வரிகளை எழுதியிருக்கிறார்கள்.
சென்னையை அடுத்த சுங்குவார் சத்திரத்தில் பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் பாபா ஆசிரமத்தில் ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று மாலை மிக எளிமையாக நடந்தது.
ப்ரம்மாகுமாரிகள் இயக்கத்தின் தலைவர் மூத்த சகோதரி கலாவதி, ஒருங்கிணைப்பாளர் மூத்த சகோதரி பீனு, அசோக்நகர் கிளை தலைவர் சகோதரி தேவி, நுங்கம்பாக்கம் கிளை தலைவர் சகோதரி சித்ரா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மக்கள் குரல் ராம்ஜி, ‘அம்மா’ தமிழ் பாடலின் பாடலாசிரியர் ரமேஷ் வைத்யா, திரைப்பட வசனகர்த்தா பாஸ்கர் சக்தி, ஜேஎஸ்ஜே ஆடியோ நிறுவனத் தலைவர் சங்கர் கணேஷ் ஆகியோர் பங்கேற்று எஸ்.ஜே. ஜனனிகபுகு வாழ்த்துக் கூறி பாராட்டினார்கள்.
* கோடை விடுமுறையையொட்டி 300 பள்ளிச் சிறுவர் – சிறுமிகள் பங்கேற்ற 2 நாள் பயிற்சி நிறைவு நாளில், அந்தச் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு மத்தியில் ஆல்பம் வெளியிடப்பட்டது.
நெஞ்சை நெகிழ வைக்கும் பாடலை தமிழில், அரங்கில் பாடினார் ஜனனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *