செய்திகள்

24 மாநிலங்களில் 70 கோடி பேரின் தகவல்களை திருடியவர் கைது: தெலுங்கானா போலீஸ் நடவடிக்கை

ஐதராபாத், ஏப். 2–

24 மாநிலங்களில் சுமார் 70 கோடி பேர் தகவல்களை திருடிய நபர் தெலுங்கானா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமேசான், நெட்பிளிக்ஸ், யூடியூப், பேடிஎம், போன் பே, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டுவிட்டர், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயனர்களால் கொடுக்கப்படும் தகவல்களை திருடியதாக வினய் பரத்வாஜ் என்ற நபரை தெலுங்கானா போலீசார் கைது செய்துள்ளனர்.

70 கோடி பேரின் தகவல்

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 24 மாநிலங்களில் உள்ள சுமார் 70 கோடி பேரின் தனிப்பட்ட ரகசிய தகவல்களை திருடி விற்றதாக தெரிய வந்துள்ளது. அவரிடம் மேலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இவர் ராணுவ அதிகாரிகள் அரசு ஊழியர்களின் தகவல்களையும் திருடியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. ஒரே ஒரு நபர் நாட்டில் உள்ள 70 கோடி பேர் நபர்களின் ரகசிய தகவல்களை திருடியதால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *