செய்திகள்

1022 கி.மீ. தூரம் நடந்து சாதனை படைத்த இளைஞர்கள்

நாகர்கோவில், ஜூன் 19–

பணம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியும் என்பதை 1022 கி.மீ., நடந்து வந்து 2 இளைஞர்கள் நிரூபித்துள்ளனர்.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கம்மாடம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரம்சாத் வயது 24. பானத்தூரை சேர்ந்தவர் அஸ்வின் பிரசாத் வயது 20. பிளஸ்டூ படித்துள்ளார். நண்பர்களான இவர்கள் பணம் இல்லாமல் சாதனை நிகழ்த்த முடியும் என்பதை நிரூபிக்க கடந்த மார்ச் 26ல் காசர்கோட்டில் இருந்து நடைபயணம் தொடங்கினர்.

பொது மக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டும், இரவில் பெட்ரோல் பங்குகளில் தங்கியும் 1022 கி.மீ. தூரம் நடந்து நேற்று கன்னியாகுமரி வந்தனர்.இங்கு கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் பயணத்தை நிறைவு செய்த இவர்கள், பணம் இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலையை மாற்றத்தான் இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *