செய்திகள்

குறைந்த மின்சாரத்தில் கூடுதல் குளிரூட்டும் வசதி; புளூ ஸ்டார் ஏசி அறிமுகம்

சென்னை, மார்ச். 15–

புளூஸ்டார் தனது பிளாட்டினம் விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 75 புதிய ரூம் ஏர்கண்டிஷனர் மாடல்களை அறிமுகப்படுத்துகிறது. இதன் உயரிய மற்றும் ஸ்டைலான மாடல்களில் திறன் அளவீட்டில் 30%க்கும் அதிகமான கூடுதல் குளிரூட்டும் ஆற்றல் சேமிப்புடன் வழங்கும் இன்வெர்ட்டர் ஏ.சி.களும். உள்ளடங்கும். இது கடும் கோடையிலும் பெரிய அறைகளில் வெப்பநிலையை உடனடியாக குறைக்க உதவுவதோடு மின்ஆற்றல் பயனீட்டைக் குறைத்து மின்கட்டணத்தையும் கணிசமாக குறைத்துவிடுகிறது. இந்த மிகச்சிறந்த செயல்பாட்டிற்கான காரணம் புளூ ஸ்டாரின் தனித்துவமான ஹெவிட்யூட்டி டிசைன் கொண்ட அவுட்டோர் யூனிட்டாகும். ஒரு 1.5 டன் 5 ஸ்டார் இன்வெர்ட்டர் ஏ.சி.யின் இந்த அவுட்டோர் யூனிட்டின் எடை சுமார் 46 கிலோவாகும்.

இந்த இன்வெர்ட்டர் ஏ.சி.களின் விலை ரூ.33,790 முதல் துவங்குகிறது. மேலும் முன்னணி வங்கிகள் மற்றும் நிதியுதவி நிறுவனங்களிடமிருந்து நுகர்வோர்கள் 0% நிதியுதவியுடனான எளிய தவணை முறையும் கேஷ் பேக் சலுகைகளையும் பெறமுடியும். அனைத்து புளூ ஸ்டார் ஏ.சிகளும் முதல் வருடத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஒட்டுமொத்த உத்தரவாதத்துடனும் கம்ப்ரெஸர் மீது 10 வருடங்கள் என்ற நீண்டகால உத்தரவாதத்துடனும் கிடைக்கின்றன என்று இதன் நிர்வாக இயக்குனர் பி.தியாகராஜன் தெரிவித்தார்.

புளூஸ்டார், புதிய ஐசீர் 5.30 உயர்திறன் கொண்ட இன்வெர்ட்டர் ACக்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஐசீர் 4.50 கொண்ட வழக்கமான 5 ஸ்டார் ஏசிக்களை விட 18% குறைவான மின்ஆற்றலை பயன்படுத்தக்கூடியது. இதன்மூலம் ஆற்றல் சேமிப்பில் ஒரு புதிய அளவீட்டை நிர்ணயித்துள்ளது. மேலும், 0.1°C மற்றும் 0.5°C வரையில் கூடுதலாக வெப்பநிலையை துல்லியமாக வைப்பது, கூடுதல் நிசப்தமான செயல்பாட்டிற்காக கம்ப்ரெஸருக்கு சவுண்ட்ப்ரூஃப் அகோஸ்டிக் ஜாக்கெட், விரைவான குளிரூட்டுதலுக்கான ட்யூயல் ரோட்டார் தொழில்நுட்பம், வெளியில் பொருத்தப்படவேண்டிய ஸ்டெபிலைசர் தேவைப்படாத வகையில் 160V முதல் 270Vவரை சீராக செயல்படும் உள்பொருத்தப்பட்ட வோல்டேஜ் ஸ்டெபிலைசர் போன்ற தனித்துவமான சிறப்பம்சங்களுடன் இந்த புதிய வகைகள் அறிமுகப்படுத்தபடுகின்றன.

‘வைபை’ வசதியுடன் கிடைக்கும் ப்ளூ ஸ்டார் இன்வெர்ட்டர் ஏ.சி.களை வாடிக்கையாளரைக் கருத்தில் கொண்ட மொபைல் ஆப் மூலம் இயக்கமுடியும். மேலும், இதன் மூலம் மெஷினை கண்காணிக்கவும் கையாளவும் முடிவதோடு, நுகர்வோர்கள் தங்கள் ஏ.சி. தோற்ற வடிவத்தை பிரத்தியேகமாக வைத்துக் கொள்ளவும் முடிகிறது. ஏ.சி.க்களை ஒன்றிணைத்து சிறப்பாக கட்டுப்பாட்டிற்குள் வைக்கமுடிகிறது. மேலும், செட்டிங்குகளை அனுகூலமாக வைப்பதோடு இந்த ஆப்-ஐ வீட்டுசூழலில் தானியங்கி சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்க முடிகிறது. கூடவே, இதனுள் ‘ஸ்மார்ட் பட்ஜெட் மேனேஜ்மெண்ட்’ உள்ளதால் அது பயனாளிகள் அவர்களின் நிதிநிலையை அறிவுபூர்வமாக நிர்வகிக்கவும், ஏ.சி. பயனீட்டு நிலவரத்தை கண்காணிக்கவும், பல்வேறு நேரங்களுடன் உறக்க நிலைகளுடன் ஏ.சி.க்களை இயக்கவும் உதவுகின்றன.

இத்துறையில் 5 ஸ்டார் ஏர் கண்டிஷனர்கள் பிரிவில் ப்ளூ ஸ்டாரின் பங்கு மிக அதிகமாக உள்ளது என்பதை முன்னணி தயாரிப்புகளை வாங்கும் நுகர்வோர்களின் விருப்பத்தேர்வாக இது உள்ளது என்பதிலிருந்தே அறிந்து கொள்ள முடிகிறது. இந்த இன்வெர்ட்டர் மாடல்களின் அனைத்து வகைகளும் சுற்றுச்சூழலுக்கேற்ற ரெஃப்ரிஜிரண்டுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏர் கூலர்கள் மற்றும் ஏர் ப்யூரிஃபையர்கள்

‘விண்டஸ்’ பெயரில் புளூஸ்டார் புதிய ரகங்களிலான ஏர்கூலர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை விரைவான குளிரூட்டலுக்கு உதவும் வகையில் தனித்துவமான தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. 35 லிட்டர்கள் முதல் 75 லிட்டர்கள் வரையிலான தண்ணீர் டேங்க் கொள்திறன்களுடனும் ரூ.8,990 முதல் ரூ.13,490 வரையிலான விலைகளுடன் இந்த ரகங்கள் வருகின்றன.

இந்தியா முழுவதும் பரவலாக பெரும்பாலான நகரங்களில் அதிகரித்துக்கொண்டேயிருக்கும் மாசு அளவை எதிர்கொள்ளும் வகையில் புதிய ரகங்களிலான ஏர் ப்யூரிஃபையர்களையும் புளூ ஸ்டார் அறிமுகப்படுத்துகிறது. இந்த ஏர் ப்யூரிஃபையர் ரகங்களின் விலை ரூ.8,990 முதல் ரூ.23,990 வரை உள்ளது.

புளூஸ்டார் லிமிடெடில் ஏப்ரல் 1 2019 முதல் மேலாண்மை இயக்குநராக பதவியேற்க உள்ள அதன் இணை மேலாண்மை இயக்குநர் பி.தியாகராஜன்,’’முன்புபோலவே, நாங்கள் வித்தியாசமான, அதிநவீன புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். புளூ ஸ்டார் எப்போதுமே அதிக ஆற்றல் திறன் கொண்ட, குறைவான மின்சக்தியுடன் கூடுதலாக குளிரூட்டும் தயாரிப்புகளை அளிப்பதில் முனைப்புடன் உள்ளது, அதிக நுகர்வோர்களைக் கருத்தில் கொண்டு அனைத்து விலைகளிலும் தயாரிப்புகளை நாங்கள் கொண்டுள்ளோம்.. நாங்கள் தயாரிப்பு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முதலீட்டை செய்வதுடன் விற்பனைக்கு பின்னரான சேவை, பிராண்டு உருவாக்கம் ஆகியவற்றினை தொடர்ந்து இந்த நிதி ஆண்டில் விற்பனையை 13.5% ஆக உயர்த்த உள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *