செய்திகள்

ம.பி. தேர்தல்: 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

போபால், அக். 20–

மத்திய பிரதேச மாநிலத்தில் 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 88 தொகுதிகளுக்கான 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 17ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக 230 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் ஏற்கனவே 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு 88 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

3 வேட்பாளர்கள் மாற்றம்

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று இருந்த 3 தொகுதிகளின் வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், ஒரு தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் கட்சி இன்னும் அதிபாரபூர்வமான வேட்பாளரை வெளியிடவில்லை.

பெட்டல் மாவட்டத்திலுள்ள அம்லா தொகுதிக்கான வேட்பாளர் பெயர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் சார்பில் துணைப் பெண் ஆட்சியரான நிஷா என்பவர் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் ஆளும் பா.ஜ.க அரசு அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை. இது குறித்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த உள்ளது.

இதன் காரணமாக ஒரு இடத்திற்கு மட்டும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமான வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *