செய்திகள்

இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்: 26–ந் தேதி முதல் வீடுவீடாக தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் பணியில் மந்தம்: ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை, பிப்.22-

இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில், வீடு வீடாகச் சென்று தி.மு.க. சார்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது தி.மு.க. நடவடிக்கை எடுக்க தயங்காது என்றும் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே கருத்துக்களை கேட்டறிந்தார்.

அப்போது வரும் 26ம் தேதி முதல் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் வீடு வீடாகச் சென்று தி.மு.க.வினர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜகவின் அநீதி, தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடையே சென்று சேர்க்க முதல்வர் வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும் ஸ்டாலின் பேசுகையில், தேர்தல் பணிகள் பெரும்பாலான மாவட்டங்களில் திருப்பதிகரமாக இருந்தாலும் பல்வேறு இடங்களில் மெத்தனமாக உள்ளது. சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது தி.மு.க. நடவடிக்கை எடுக்க தயங்காது, அதே நேரத்தில் சரியாக செயல்படும் நிர்வாகிகளுக்கு தி.மு.க.வில் அங்கீகாரம் கிடைக்கும். கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அடிமட்ட தொண்டர்களின் எண்ண பிரதிபலிப்பை வைத்தே தலைமை செயல்படும், நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *