செய்திகள்

‘‘மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்’’

தமிழக அரசு உறுதி

சென்னை, பிப்.12–

‘சிறுபான்மையினர்‌ மற்றும்‌ இலங்கைத்‌ தமிழர்களின்‌ உரிமைகளைப்‌ பாதுகாத்து அவர்களுடன்‌ என்றும்‌ நாம்‌ துணை நிற்போம்‌. அந்த வகையில்‌ ஒன்றிய அரசின்‌ குடியுரிமை திருத்தச்‌ சட்டத்தை தமிழ்நாட்டில்‌ ஒரு போதும்‌ நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என்பதில்‌ இந்த அரசு உறுதியாக உள்ளது’ என்று கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.

இன்று சட்டசபையில் கவர்னர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:–

சங்ககாலத்‌ தமிழர்‌ கடைபிடித்த உலக உடன்பிறப்பு நேயத்தை எடுத்துரைக்கும்‌ இந்த மகத்தான வரிகள்‌ தான்‌ இந்த அரசை வழிநடத்திச்‌ செல்கின்றன. வேற்றுமையில்‌ ஒற்றுமை என்ற நமது நாட்டின்‌ உன்னதமான கொள்கைகள்‌ தற்போது கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும்‌ இவ்வேளையில்‌, தமிழ்நாட்டில்‌ சமூக நல்லிணக்கத்தைப்‌ பேணி பாதுகாப்பதில்‌ நமது அரசு உறுதியாக உள்ளது.

2021–ம்‌ ஆண்டில்‌ நடைபெற்றிருக்க வேண்டிய தேசிய பத்தாண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடுத்து மேற்கொள்ளப்படும்போது சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பையும்‌ ஒருங்கிணைத்து நடத்திடுமாறு பிரதமரை முதலமைச்சர்‌ வலியுறுத்தியுள்ளார்‌.

நம்பகத்தன்மை வாய்ந்த புள்ளிவிவரங்களின்‌ அடிப்படையில்‌ ஆராய்ந்து, உரிய கொள்கை முடிவுகளை எடுத்திட இந்த முயற்சி பெரும்‌ உதவியாக இருக்கும்‌ என்பதால்‌ இக்கோரிக்கை ஒன்றிய அரசால்‌ ஏற்கப்படும்‌ என்றும்‌ இந்த அரசு நம்புகிறது.

சமத்துவ மற்றும்‌ அனைவரையும்‌ உள்ளடக்கிய சமூகத்தினை உறுதிசெய்திடும்‌ நோக்கத்தின்‌ ஒரு பகுதியாக, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை 1500௦ ரூபாயிலிருந்து 200௦ ரூபாயாகவும்‌, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும்‌ இந்த அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள்‌ நல வாரியத்தில்‌, மருத்துவ உதவி, விபத்தால்‌ ஏற்படும்‌ மரணத்திற்கான இழப்பீடு போன்ற உதவிகளும்‌ நடப்பாண்டில்‌ ஒரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளன. இத்தகைய முயற்சிகள்‌ மூலம்‌ 10:11 லட்சம்‌ மாற்றுத்‌ திறனாளிகளுக்குத்‌ தேவையான வசதிகள்‌ வழங்கப்படும்‌.

குறைந்த வருவாய்‌ ஈட்டுவோர்‌, தங்களின்‌ வாழ்வாதாரத்தை மேம்படுத்த இயலாத நபர்கள்‌, குறிப்பாக, முதியோர்கள்‌, ஆதரவற்ற விதவைகள்‌, கணவனால்‌ கைவிடப்பட்ட பெண்கள்‌ போன்றவர்களின்‌ நலன்‌ காக்க, அரசு பல்வேறு சமூகப்‌ பாதுகாப்பு ஓய்வூதியத்‌ திட்டங்களைச்‌ செயல்படுத்தி வருகிறது. இவர்களுக்கான மாத ஓய்வூதியத்தை 2023–ம்‌ ஆண்டில்‌, 14000 ரூபாயிலிருந்து 4200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால்‌, 845 கோடி ரூபாய்‌ கூடுதல்‌ செலவினம்‌ ஏற்பட்டுள்ளது. மேலும்‌, நிலுவையில்‌ இருந்த அனைத்து விண்ணப்பங்களுக்கும்‌ தீர்வுகாணப்பட்டதன்‌ பயனாக, 74,073 தகுதியுடைய பயனாளிகள்‌ புதிதாக சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டத்தில்‌ சேர்ந்துள்ளனர்‌.

இவ்வாறு அந்த உரையில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *