செய்திகள்

பதான்கோட் தாக்குதல் தீவிரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத், அக். 12–

2016 இல் பதான்கோட் தாக்குதலை நடத்திய முக்கிய தீவிரவாதி, பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட்டில், இயங்கி வரும் இந்திய விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பின்னால் முக்கிய நபராக இருந்த ஜெய்ஷ்-இ-முகமது ( JeM) இயக்கத்தைச் சேர்ந்த ஷாஹித் லத்தீப், நேற்று பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

சுட்டுக்கொலை

இது குறித்து சியால்கோட் காவல்துறையின் அறிக்கையின்படி, அதிகாலை 5.30 மணியளவில் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தஸ்கா சதர் முண்டேகேயில் நூர் மதீனா மசூதிக்குள் 3 அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியுடன் நுழைந்து மக்கள் ஃபஜ்ர் தொழுகையை நடத்திக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில், ஷாஹித் சாஹிப் மற்றும் அவரது பாதுகாவலர் ஹாஷிம் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் அப்துல் அஹத் என்ற மற்றொரு நபர் காயமடைந்தார். கொலை செய்யும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் நிலையில், அதை பயங்கரவாதம் என்று சொல்லலாம் என சியால்கோட் மாவட்ட காவல்துறை அதிகாரி ஹசன் இக்பால் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஜனவரி 2016 இல் பதன்கோட் விமானப்படைத் தளத்திற்குள் நுழைந்த ஷாஹித் லத்தீஃப், ஷாஹித் சாஹிப் உள்ளிட்ட 4 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 3 ஐஎஃப்ஏ (IAF) வீரர்கள் கொல்லப்பட்டனர். இது குறித்து 2016 டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், பதான்கோட் தாக்குதலின் பின்னணியில் லத்தீப்பை முக்கிய சதிகாரன் என்றும், அவரது பின்னணியில் இருந்தவர் ஜெய்ஷ் இஎம் தலைவர் மவுலானா மசூத் அசார் என்றும் என்ஐஏ கூறியது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *