செய்திகள்

கும்பாபிஷேக நேரலைக்கு போலீஸ் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட்

சென்னை, ஜன. 22–

அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு பின் நீதிபதி கூறியதாவது:- ராமர்கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தனியார் கோவில்கள், திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை. அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் நேரலை, பூஜை மேற்கொள்ள வேண்டுமென்றால் கோவில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும். கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *