செய்திகள்

கோவை உயிரியல் பூங்கா மூடல் : பறவைகள், விலங்குகள் வண்டலூர் பூங்காவுக்கு வந்தன

சென்னை, நவ. 4–

கோவை உயிரியல் பூங்கா மூடப்பட்டதால் அங்கிருந்த பறவைகள், விலங்குகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டன.

கோவையில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்தது. இதையடுத்து அப்போது முதல் அங்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.இந்நிலையில் கோவை வ.உ.சி. பூங்கா மூடப்பட்டது. இதையடுத்து அங்குள்ள பறவைகள், விலங்குகள், ஊர்வன போன்ற பிராணிகள் மற்ற உயிரியல் பூங்காக்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகள், பாம்புகள், ஆமைகள் போன்றவை சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கும், வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்காவுக்கும் மாற்றப்பட்டன.இடமாற்றம் செய்யப்பட்ட பறவைகள் மற்றும் ஊர்வன போன்றவற்றில் 51 ரோஸ் வளையம் கொண்ட கிளிகள், 27 அலெக்சாண்ரிட்ன் கிளிகள், 18 சிவப்பு மார்பக கிளிகள், 1 சரஸ் கொக்கு, 8 பாம்புகள், 3 இந்திய நட்சத்திர ஆமைகள் உள்ளிட்டவை அடங்கும்.

மேலும் 22 பிளாக் கைட்ஸ், 88 நைட்ஸ் ஹெரோன்ஸ், 30 போனெட் மக்காக்ஸ், 11 இந்திய மலைப்பாம்புகள், 26 புள்ளிமான்கள், 25 சாம்பார் மான்கள், 10 கோப்ரா பாம்புகள் ஆகியவை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு அனுப்பப்பட உள்ளன. 23 முதலைகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்கா, மோயார் ஆறு, முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய இடங்களுக்கு மாற்றப்படுகின்றன.

இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கோவை உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகள், விலங்குகள் மற்றும் பாம்புகள் வேறு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளன. இதற்காக கூண்டுகள் அமைத்து மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பறவைகள் மற்றும் பாம்புகளின் மன அழுத்தத்தை குறைக்க அவற்றை ஏற்றி வந்த லாரிகள் ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கும் ஒருமுறை நிறுத்தப்பட்டு சிறிது நேரம் கழித்தே மீண்டும் இயக்கப்பட்டன என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *