செய்திகள்

உலக பட்டினி குறியீட்டில் இந்தியாவுக்கு 111 வது இடம் : நிராகரித்த ஒன்றிய அரசு

டூப்ளின், அக். 14–

உலக பட்டினி குறியீடு எடுக்கப்பட்ட 125 நாடுகளில் இந்தியா 111 வது இடத்திற்கு தள்ளப்பட்டள்ள நிலையில், இந்திய ஒன்றிய அரசு அதனை ஏற்க மறுத்துள்ளது.

ஆண்டுதோறும் அயர்லாந்தைச் சேர்ந்த கன்சரன் வேர்ல்ட் வைட் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பெல்ட் ஹங்கர் ஹில்பே ஆகிய நிறுவனங்கள் இணைந்து சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகிறது.

111 வது இடத்தில் இந்தியா

அந்த வகையில் இந்த ஆண்டும் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. அதில் 125 நாடுகள் அடங்கிய பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி உலக பட்டினி குறியீட்டு பட்டியலில் இந்தியா 111 வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த அறிக்கையை ஏற்க முடியாது என உலக பட்டியல் குறியீட்டு அறிக்கையை நிராகரித்து ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த குறியீடு தீவிரமான வழிமுறை சிக்கல்களை வெளிப்படுத்துவதோடு தவறான நோக்கத்தையும் காட்டுகிறது. நான்கில் மூன்று குழந்தைகளின் ஆரோக்கியத்தை தொடர்புடைய இந்த குறியீடு, கணக்கு ஒட்டுமொத்த மக்கள் தொகையை பிரதிபலிக்கப்படுவதாக கூறுவது ஏற்க முடியாதது.

மேலும் 3000 என்கிற மிகச் சிறிய மதிப்பு அளவுகளைக் கொண்ட கருத்துக்கணிப்பின் மூலம் மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்தியாவின் ஊட்டச்சத்தின் குறைபாடுகளை கணக்கிட முடியாது என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *