செய்திகள் வர்த்தகம்

வீடியோ படம் பார்க்கும் வசதியுடன் அமேசான் ஸ்பீக்கர்கள் அறிமுகம்

சென்னை, ஜூலை.3–

அமேசான், தனது புதிய எக்கோ ஷோ எனும் திரையுடன் கூடிய ஸ்பீக்கர் சாதனங்களின் இரு புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ‘எக்கோ ஷோ 10’ மற்றும் புதிய ‘எக்கோ ஷோ 5’ என்ற இந்த இரு சாதனங்களுமே அடிப்படையில் – மிகத் துல்லியமான ஒலி அனுபவத்தை விரும்பும் இசைப் பிரியர்கள் மற்றும் இளம் தலைமுறையினருக்கான பிரத்யேக அறிமுகமாகும்.

முற்றிலும் புதிய அறிமுகமான ‘எக்கோ ஷோ 10’, அமேசானின் மற்றொரு அதிநவீன தொழில்நுட்பப் படைப்பு. இதில் 10.1” அளவுள்ள உயர்தொழில்நுட்ப துல்லிய திரை (HD Display) இடம்பெற்றுள்ளது. இதன் முன்புறம் 13 மெகாபிக்ஸல் துல்லியம் கொண்ட கேமராவும் உள்ளது. அதோடு, உயர்தர ஒலியில் இசையைக் கேட்டு ரசிக்க ஏற்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன. இது மட்டுமின்றி, அலெக்ஸா என்ற அப்ளிகேஷன் உதவியோடு, இச்சாதனத்தின் திரையை, நமக்கு ஏற்றவாறு திருத்தி அமைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

‘எக்கோ ஷோ 5’ என்பது அமேசானால் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட சாதனம்தான். ஆனால், தற்போது அதன் மேம்படுத்தப்பட்ட புதிய வடிவம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதில், முந்தைய மாடலில் இடம்பெற்று பிரபலமான அதே 5.5” அளவுள்ள திரை மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கருடன், தற்போது கூடுதல் வசதியாக, உயர்திறன் கொண்ட (HD) நுட்பமான கேமராவும் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால், தொலைதூரத்தில் உள்ள நண்பர், உறவினர்களை வீடியோ அழைப்பில் முகம் பார்த்து பேசும் வசதி இணைகிறது. அதுதவிர, ‘எக்கோ ஷோ 10’ல் உள்ளது போல, அறையில் நாம் இருக்கும் இடத்திற்கு ஏற்ப திரையில் கோணமும், காட்சியும் தகவமைத்துக் கொள்ளும் வசதி இதிலும் சேர்ந்தே கிடைக்கும். தற்போது ‘எக்கோ ஷோ 5’ – கருப்பு, வெள்ளை நிறங்களைத் தாண்டி, நீல நிறத்திலும் கிடைக்கிறது.

எக்கோ ஷோ 10ன் கருப்பு நிற மாடல்கள் ரூ.24 ஆயிரத்து 999க்கு கிடைக்கிறது. அதேபோல, எக்கோ ஷோ 5 தற்போதைய விலை ரூ.8 ஆயிரத்து 999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. www.amazon.in/Echoshow5 என்ற வலைதளத்தில் வாங்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *