செய்திகள்

விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ. 65 லட்சம் தங்கம்

சென்னை, ஏப். 11–

துபாயிலிருந்து வந்த விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ. 65.38 லட்சம் மதிப்பிலான 1.36 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படக் கூடும் என்று உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா ஏஐ-906 என்ற விமானத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது விமானத்தின் கடைசி இரண்டு கழிவறைகளில் வெள்ளை நிற டேப்பால் சுற்றப்பட்ட பொட்டலம் ஒன்று இருப்பது தெரியவந்தது.

அதைப் பிரித்துப் பார்த்த போது 583 கிராம் எடையில் வெளிநாட்டு முத்திரைகளுடன் 10 தங்க துண்டுகளும் 870 கிராம் எடையில் தங்கப் பசை அடங்கிய 6 பொட்டலங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

1.36 கிலோ எடையில் ரூ. 65.38 லட்சம் மதிப்பிலான அந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *