செய்திகள்

விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் 118–வது பிறந்த நாள் விழா

சென்னை, ஜூலை 15–

பெருந்தலைவர் காமராஜரின் 118–வது பிறந்த நாள் விழா விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் சார்பாக காணொலி சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி வி.ஜி.சந்தோசம் தலைமையில் நடைபெற்றது.

அவர் தனது தலைமையுரையில், பெருந்தலைவர் காமராஜர் நாட்டுக்கு உழைத்த அருமை பெருமைகளை விரிவாக எடுத்துரைத்தார். மேலும் காமராஜரின் வழியிலேயே மக்களுக்குத் தன்னலமற்ற பொதுநல சேவை செய்து வாழவேண்டும். அதுவே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான புகழ் அஞ்சலியாகும் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

காமராஜரின் பேத்தி டி.எஸ்.கே. மயூரி ‘தலைவர்கள் நேசித்த பெருந்தலைவர்’ என்ற தலைப்பிலும், தீன்ஷா நூப் அப்பாஸ், ‘காமராஜரும், அப்துல் கலாமும்’ என்ற தலைப்பிலும் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சி எல்லா நாடுகளிலும் காணொலி மூலமாக பார்க்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்பாக பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு வி.ஜி.சந்தோசம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *