செய்திகள்

விஐடியில் இதுவரை 2200 மாணவர்களுக்கு வேலை: ஆரம்ப சம்பளம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம்

Spread the love

வேலூர், செப். 12

விஐடியில் இந்த ஆண்டில் இதுவரை மட்டும் 2200 மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு வேலைவாய்ப்புகளுக்காக விஐடியில் வளாக வேலை வாய்ப்பு நேர்காணலில் 719 நிறுவனங்கள் பங்கு பெற்று 4397 வேலைவாய்ப்புகளை வழங்கியது. மைக்ரோ சாப்ட் நிறுவனம் 2019ல் பட்டப்படிப்பு முடித்த 14 மாணவர்களை ஆண்டுக்கு ரூ. 39.5 லட்சம் சம்பளத்தில் வேலை வழங்கியது. இந்த ஆண்டு, இது வரை 245 நிறுவனங்கள் பங்கு பெற்று, 2026 மாணவர்கள் ட்ரீம் மற்றும் சூப்பர் ட்ரீம் நிறுவனங்களால் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. வேலைவாய்ப்பு அட்டவணை நடப்பு ஆண்டு அக்டோபர் மாதம் இறுதி வரை தொடரும்.

2020ல் பட்ட மேற்படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கான வளாக வேலைவாய்ப்பு நேர்காணல் விஐடியில் நடப்பு ஆண்டு மே 1ந் தேதி அன்று தொடங்கியது. 150 நிறுவனங்கள் வேலை வாய்ப்பு நேர்காணலை நடத்தியுள்ளன. மேலும் எம்.டெக், எம்.சி.ஏ படிப்புகளிலிருந்து 788 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அமேசான், நெட் ஆப், இன்டெல், வி.எம். வேர், ஆரக்கிள், பிலிப்ஸ், கம்மின்ஸ், ரிலையன்ஸ் முதலியன முக்கிய நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்பில் குறிப்பிடத்தக்கவை.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ஆகஸ்ட் முதல் 10 மாதம் வரை இன்டர்ன்ஷிப்பை செய்யத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 10 ஆயிரம் – முதல் ரூ. 50 ஆயிரம் – வரை வழங்கப்படுகிறது. அவர்களின் இன்டர்ன்ஷிப் காலத்திற்குப் பிறகு, பெரும்பாலான மாணவர்கள் முழுநேர ஊழியர்களாகிவிடுவார்கள். ஆரம்ப சம்பளம் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் மற்றும் அதற்கு மேல் இருக்கும்.

2020ல் பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கான வளாக வேலைவாய்ப்பு நேர்காணல் விஐடியில் நடப்பு ஆண்டு ஜூலை 3 வது வாரத்தில் தொடங்கியது. சூப்பர் ட்ரீம் நிறுவனங்கள் (சி.டி.சி 10 லட்சத்திற்கும் அதிகமானவை) முதல் கட்ட வளாக வேலைவாய்ப்புக்காக அழைக்கப்பபட்டன. சூப்பர் ட்ரீம் நிறுவனங்களின் ஸ்லாட் 1ல் 4 நிறுவனங்கள் பங்கு பெற்றன . இந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு 25 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வழங்கும். அமேசான் (17), பே பால் (3), சிஸ்கோ (21), டி ஷா (2) ஆகிய நிறுவனங்கள் ஸ்லாட் 1ல் (சூப்பர் ட்ரீம்) பங்கு பெற்றன.

முன்னதாக, மைக்ரோ சாப்ட் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.41.6 லட்சம் சம்பளத்தில் (சி.டி.சி) 7 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான சம்பளமாகும். மேலும் இதுவரை, 92 சூப்பர் ட்ரீம் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு மற்றும் இன்டர்ன்ஷிபிற்காக விஐடியில் நேர்காணல் நடத்தியுள்ளன.

கோர் என்ஜினியரிங் வேலைவாய்ப்புகளும், ஐ.டி வேலைவாய்ப்புகளுடன் ஒரு சேர நடந்து வருகின்றன. ஸ்க்லம்பெர்கர், பஜாஜ் ஆட்டோ, எல் அண்ட் டி கன்ஸ்ட்ரக்க்ஷன், வேலியோ, என்எக்ஸ்பி செமி கன்டக்டர், கம்மின்ஸ், வர்ரோக், வால்டெக், ஃபெசிலியோ, ஷாபூர்ஜி, ஹூண்டாய் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் (கோர் என்ஜினியரிங் நிறுவனங்கள்) விஐடியில் வளாக வேலைவாய்ப்பில் முக்கியமாக பங்கு பெற்றன.

டி.சி.எஸ், விப்ரோ, இன்போசிஸ் நிறுவனங்கள்

ஆலோசனை நிறுவனங்கள், பகுப்பாய்வு நிறுவனங்கள், வங்கிகள் வேலைவாய்ப்பு மற்றும் இன்டர்ன்ஷிபிற்காக விஐடியில் ட்ரீம் பிரிவில் நேர்காணல் நடத்தியுள்ளன. டெல்லாய்ட், ஜே.பி. மோர்கன் மற்றும் பி.டபிள்யூ.சி போன்ற ஆலோசனை நிறுவனங்கள் வி.ஐ.டி.யில் நேர்காணல் நடத்தியுள்ளன. வி.ஐ.டி.யில் இருந்து டெலோயிட் நிறுவனம் 105 மாணவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. பிற ஆலோசனை நிறுவனங்களான கே.பி.எம்.ஜி, ஈ & ஒய் மற்றும் பி.சி.ஜி ஆகியவை வரும் மாதத்தில் வருகை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.பி.எஸ், பார்க்லேஸ், ஆக்சிஸ் வங்கி போன்ற பன்னாட்டு வங்கிகள் விஐடியில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தியுள்ளன. பாங்க் ஆப் அமெரிக்கா மற்றும் ஸ்டேட் ஸ்ட்ரீட் ஆகியவை வரும் மாதத்தில் வருகை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி.சி.எஸ், விப்ரோ, இன்போசிஸ் மற்றும் காப்ஜெமினி போன்ற ஐ.டி சேவை நிறுவனங்கள் விஐடி மாணவர்களை அதிகப்படியான சம்பளத்திற்கு (சி.டி.சி.) வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. டி.சி.எஸ் டிஜிட்டல் வி.ஐ.டி-யிலிருந்து 244 மாணவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இதுவே கடந்த கல்வியாண்டில் விஐடி-யிலிருந்து (டி.சி.எஸ்- டிஜிட்டளுக்கு) 84 மாணவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. தற்போது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகப்படியான மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவிலே டி.சி.எஸ்-. டிஜிட்டளுக்கு அதிக்கப்படியான மாணவர்களை வி. ஐ. டியில் இருந்து தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விப்ரோ தனது டர்போ பணியமர்த்தலுக்காக விஐடியிலிருந்து 278 மாணவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இது கடந்த கல்வியாண்டில் விஐடி-யிலிருந்து பணியமர்த்தப்ட்ட 238 காட்டிலும் அதிகம் (சிடிசி 6.5 லட்சம்) ஆகும். விஐடி மற்றும் விப்ரோ தொடர்ச்சியாக 4வது முறையாக அதிக பணியமர்த்தலுக்காக லிம்கா புத்தகத்தில் இடம்பெற வாய்ப்புள்ளது.

ஐடி சர்வீஸ் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு தற்போது நடக்கிறது. வேலைவாய்ப்பு அட்டவணை அடுத்த மே வரை செல்லும். எம்பிஏ, என்ஜினீயரிங் அல்லாத வேலைவாய்ப்புகள் இம்மாதத்தில் தொடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *