செலின் ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்.
நேர்மையான மனிதர் யாருக்கும் துரோகம் இளைக்காதவன். அவனாேட உலகம் உண்மையானது.அவன் அலுவலகத்தை விட்டுவரும்போது உடன் பெரியசாமியும் வந்தார்.
இருவரும் பேசிவிட்டு அருகில் இருக்கும் காபிக் கடையில் காபி குடித்தார்கள்.
அப்போது ஒரு பேருந்து வந்தது.அந்தப் பேருந்தை அலட்சியம் செய்த செலின் அதில் ஏறாமல் நின்று காெண்டிருந்தான்.
சரி போகட்டும், அடுத்த பேருந்தில் ஏறலாம் என்று அந்தப் பேருந்தை விட்டுவிட்டு சிறிது நேரம் பெரியசாமியுடன் பேசிக் கொண்டிருந்தான்.
பெரியசாமியும் சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பினார்.
சரி நான் கொஞ்ச நேரம் பார்க் போயிட்டு வரேன் .
நீங்க பஸ் வந்தா போகலாம்
என்று சொல்லிவிட்டு விடை பெற்றார் பெரியசாமி.
சரி என்று சொன்ன செலின்
நீங்க போயிட்டு வாங்க நான் பஸ் வந்தா ஏறிக்கிறேன் என்று சொல்லிவிட்டு பேருந்திற்காக நின்றான்.
ஐந்து நிமிடம் , பத்து நிமிடம் என்று நேரம் கரைந்து கொண்டிருந்தது. பேருந்து வரவில்லை.
அங்கே கொஞ்ச நேரம், இங்கே கொஞ்ச நேரம் என்று நின்று கொண்டு இருந்தானேயொழிய பேருந்து வரவில்லை. அவன் நிற்கும் வழித்தடத்தில் எல்லாம் ஏதோ பேருந்து வந்து கொண்டிருந்தது. ஆனால் அவன் செல்லக்கூடிய பேருந்து வரவில்லை. அவனுக்கு கொஞ்சம் எரிச்சலானது.
என்ன பஸ் வரலையே? என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
அப்பாேது அவனை விட்டுச் சென்ற பெரியசாமி ஒரு மணி நேரம் கழித்து வந்தார்.
என்ன இன்னும் போகலையா? என்று கேட்டதற்கு
இன்னும் பஸ் வரல அதான் நின்னுகிட்டு இருக்கேன் என்றான் செலின். மறுபடியும் இரண்டு பேரும் காபி குடித்தார்கள்.
அப்போதும் அவன் பேருந்து வரவில்லை . காபி குடித்துவிட்டு பெரியசாமி சொன்னார்:
செலின் இதுதான் வாய்ப்புங்கிறது ஒரு தடவை தான் வரும். பஸ் வரும் போது அதுல ஏறி நீ போய் இருந்தா இந்நேரம் வீட்டுக்குப் போயிருப்பே . உன்னுடைய பஸ்சை தவறவிட்டதுனால இப்போ இவ்வளவு நேரம் நிக்க வேண்டியதாகிப் போச்சு. இதுதான் வாய்ப்பு .ஒரு மனுஷன் ஒரு விஷயத்தை தவறவிட்டா ரொம்ப நேரம் நிக்கணும் அப்படிங்கறதுக்கு இதுதான் உதாரணம் என்று பெரியசாமி சொன்னார்.
அப்போதுதான் அவன் செல்ல வேண்டிய பேருந்து வந்தது.
ஆனால் இரண்டு மணி நேரம் கடந்திருந்தது.
பேருந்து புறப்பட்டது.
கடந்து போன நேரத்தை நினைத்துக் கொண்டிருந்தான் செலின்