செய்திகள்

வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.344 கோடி இழப்பு

இஸ்லாமாபாத், ஜூலை 19

இந்திய விமானங்கள் பறக்க தடைவிதித்து வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.344 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

பாலகோட்டில் இந்திய விமானப்படை வான்வழி தாக்குதலை நடத்திய பின்னர் பாகிஸ்தான், இந்தியா விமானங்கள் பறக்க தடைவிதித்து வான்வெளியை மூடியது. கிட்டத்தட்ட 5 மாத இடைவெளியின் பின்னர் பாகிஸ்தான் தனது வான்வெளியை திறக்க கடந்த செவ்வாய்க்கிழமை முடிவு செய்தது. இந்த நடவடிக்கையை இந்திய அரசாங்கம் வரவேற்றது, மேலும் வான்வெளி கட்டுப்பாடுகள் இல்லை என்பதை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்திய விமானங்கள் பறக்க தடைவிதித்து வான்வெளியை மூடியதால் நாட்டுக்கு ரூ.344 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என பாகிஸ்தானின் மத்திய விமான அமைச்சர் குலாம் சர்வர் கூறி உள்ளார்.

இருப்பினும், இந்தியா 50 மில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பை சந்தித்ததாக அமைச்சர் கூறினார், இந்த கட்டுப்பாடு இந்தியாவை கடுமையாக பாதித்தது என்றும் இந்தியாவின் இழப்பு பாகிஸ்தானை விட இரு மடங்கு அதிகமாகும் என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு முன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், இழப்பின் சரியான கணக்கு இன்னும் கண்டறியப்படவில்லை என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *